மாநாடு படத்தின் விமர்சனம் – 7 ஆண்டுகளுக்கு முன் வந்த தான் செய்த படத்தின் விமர்சனத்தை பகிர்ந்து பங்கம் செய்த மாறன்.

0
841
maanaadu
- Advertisement -

பல போராட்டங்களுக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தில் டைம் லூப் என்ற ஒரு புதிய கான்செப்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஒரு நாள் மீண்டும் மீண்டும் நடப்பது தான் டைம் லூப். சமீபத்தில் வெளிவந்த ஜாங்கோ திரைப்படமும் டைம் லூப் கான்செப்ட் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் ரிவியூ கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, படத்தில் நடக்கிற மாநாட்டில் முதலமைச்சரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று சிம்புவிடம் சொல்கிறார்கள். முதலமைச்சரை சுட்டுக்கொண்டால் மதக் கலவரம் ஆகும் என்று சிம்புவுக்கு புரிகிறது. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று சிம்பு தவிக்கிறார்.

இதையும் பாருங்க : அக்னி கலச காலண்டரும் ஆர்டர் செய்யப்பட்டு பிரிண்ட் செய்து திட்டமிட்டு தொங்க விடப்பட்டதே – புட்டு புட்டு வைத்த முகநூல் வாசி.

- Advertisement -

அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை. படத்தில் டைம் லூப் முறையில் ஹீரோ ஒவ்வொரு முறையும் முயற்சி பண்ணும் போது தோல்வி அடைந்து மறுபடியும் முயற்சிக்கிறார். ஆனால், இதை பார்த்து ரசிகர்கள் சேர்வடைகிறார்கள். அதோடு சிம்புவின் நோக்கத்தை சொல்லும் போது ரசிகர்கள் ரொம்ப சேர்ந்து விடுகிறார்கள். ஆனால், வில்லன் எஸ் ஜே சூர்யா அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தில் எடுக்கப்பட்ட கதை நன்றாக இருக்கிறது. ஆனால், கதையில் சரக்கு இல்லை. காரணம், முதலமைச்சரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் பார்க்கும் ரசிகர்களுக்கு தோன்றவில்லை.

ஏனென்றால், முதலமைச்சர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை காண்பிக்கவில்லை. முதலமைச்சர் உடைய பின்னணி அவரைப்பற்றி எதுவும் சொல்லாததால் இவர் செத்தாலும் பரவாயில்லை என்று படம் பார்ப்பவர்கள் நினைப்பார்கள். டெக்னிசியன் எல்லாம் ஒர்க் பண்ணி இருக்காங்க. படம் கலர்புல்லாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த படம் ஒரு சிக்கல் பிடித்த கதை. ஓரளவு புரிவதற்கு காரணம் எடிட்டிங் தான். இப்பவே இந்த படம் பாதி பேருக்கு புரியல. இந்த டைம் லூப் மூவி போனவாரம் வந்திருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தமிழ் சினிமாவிலேயே உண்மையிலேயே டைம் லூப் பற்றி முதன் முதலில் சொன்னது தமிழ் டாக்கீஸ்ஸில் தான் என்று தாழ்மையுடன் சொல்கிறோம். ஏன்னா, எங்களுடைய கன்னியும் மூணு களவாணிகளும் படத்தில் அந்த கதையை சொல்லி வந்தோம். நீங்களே கேளுங்கள் என்று மாறன்அந்த படத்தின் விமர்சனத்தின் வீடியோவை பகிர்ந்து பங்கம் செய்துள்ளார் மாறன். தற்போது இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement