அக்னி கலச காலண்டரும் ஆர்டர் செய்யப்பட்டு பிரிண்ட் செய்து திட்டமிட்டு தொங்க விடப்பட்டதே – புட்டு புட்டு வைத்த முகநூல் வாசி.

0
1306
jaibhim
- Advertisement -

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து. ஆனால், எந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியது. இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டதாக பல வன்னிய அமைப்புகள் இந்த படத்தை எதிர்தனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் காலண்டர் ஒன்றில் இடம்பெற்ற அக்னி கலச புகைப்படத்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. அதன் பின்னர் அந்த படம் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த விவகாரம் குறித்து இந்த படத்தின் இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூட ‘ 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்த காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், ‘போஸ்ட் புரொடக்‌ஷன்’ பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை.

- Advertisement -

அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட , படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம் என்று கூறி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இயக்குனர் பல இடங்களில் காலெண்டரையும் தேதிகளையும் படத்தின் காட்சிகளுக்கு பயன்படுத்தி இருப்பதாக முகநூல் வாசி ஒருவர் ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,

-விளம்பரம்-

காலேண்டர் வைத்ததே தனக்கு தெரியாது என்பது போல் இயக்குனர் அறிக்கையில் மழுப்பிருக்கார்..

படத்தில் இவர் எவ்வளவு காலண்டர் Detailed Consious ஆக வைத்துள்ளார்கள் என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்..

முதல் சூர்யா intro சீனில் திருவள்ளுவர் காலண்டர்
தேதி 09/04/1995 என்று குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளது..

சூர்யா நடத்தும் முதல் வழக்கின் போது வரும் காட்சியில் நீதிபதி
desk calender ஏப்ரல் மாதம்.

அடுத்ததாக சூர்யா வீட்டில் வரும் சித்ரா காலண்டர்..தேதி ஏப்ரல் 17 தெளிவாக இருக்கிறது.. தெளிவான திட்டமிடல் & continuity.. ஆனால் வருடம் சரியாக தெரிய வேண்டாம் என்று CGயில் Blur செய்திருக்கலாம் அல்லது வருடம் தவறுதலாக இடம் பெற்று விட்டதால் CG வாய்ப்பு.

பிறகு செங்கேணி வழக்கு தொடுக்க முயற்சிக்கையில் ஒரு வக்கீல் அலுவலத்தில் இருக்கும் விவேகானந்தர் காலண்டர் தேதி 07/05 /1995

சூர்யா கேஸ் எடுக்க முடிவு செய்யும் தேதி 11/05/ 1995 ..

சம்மன் கொடுக்கும் தேதி 16/05/1995

அடுத்து சூர்யா, ராஜாக்கண்ணுவை தேடி கேரளா செல்லும் போது அங்கு இருக்கும் காலண்டர் தெளிவாக
1995 ஜீலை மாதம் என்று காட்டுகிறது. ..

தற்போது உங்களுக்கு Set Properties ல் காலண்டர் எவ்வளோ முக்கியம்னு என்று புரிந்து இருக்கும்.. கதையின் ரியாலிட்டிக்கும் contunityக்கும் அது ரொம்ப ரொம்ப முக்கியம்..

Last But not the least இறுதியாக ராஜாகண்ணு அரஸ்ட் ஆகும் தேதி 04/04/1995 என்று சூர்யா தனது அலுவலகத்தின் பரீட்சை அட்டையில் குறித்து வைத்து யோசிப்பதாக காட்சி

அதே நேரத்தில் அந்த போலீஸ் வீட்டில் இருக்கும் காலண்டர் தேதி 06/04/1995

(போலீஸ் இரண்டு நாள் வைத்து கொடூரமாக அடித்தது என்பதை படத்தில் காட்டியிருப்பார்கள்)

அது எப்படி உங்களுக்கு தெரியாமலே தேதியெல்லாம் கரெட்டா வருகிறது.. ஆக எதுவுமே தற்செயலான நிகழ்வல்ல…

ஒவ்வொன்றும் அலசி ஆராய்ந்து முறையாக திட்டமிட்டு செய்யப்பட்டதே..

அதனால் வில்லன் வீட்டில் அக்னி கலச காலண்டரும் ஆர்டர் செய்யப்பட்டு பிரிண்ட் செய்து திட்டமிட்டு தொங்க விடப்பட்டதே என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement