கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியதால் தான் மாநாடு வெளியாவதில் சிக்கல் – செய்தியை கண்டு வெங்கட் பிரபு போட்ட கமன்ட்.

0
2037
maanadu
- Advertisement -

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஆரம்பித்த போதே தயாரிப்பாளருக்கும் சிம்புவிற்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தது. பின்னர் இந்த பிரச்சனையில் சிம்புவின் தாயார் தலையிட்டு சிம்புவை இந்த படத்தில் மீண்டும் நடிக்க வைத்தார். எப்படியோ இந்த திரைப்படம் ஒரு வழியாக எடுத்து முடிக்கப்பட்டு இருந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த திரைப்படம் வீடியோ ஆகாது என்று சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

-விளம்பரம்-

இதுகுறித்து வெளியிடபட்ட அறிக்கையில், நீடித்த கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்கு காத்திருக்கிறது மாநாடு. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக படம் வெளியிட அனைத்து வேலைகளும் செய்யப்பட்டது. படம் யாரோடும் போட்டி போடுவதற்காக வெளியிடவில்லை.ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம். அதை கருத்தில் வைத்து தான் தீபாவளிக்கு வெளியிட முடிவு எடுத்தோம்.

- Advertisement -

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படிப்பார்த்தால் அது வியாபார புத்திசாலித்தனம் அல்ல. மாநாடு படம் நன்றாக வந்துள்ளது. அதன் மீது நம்பிக்கை உள்ளது. என்னை நம்பி பட வியாபாரம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். யாரும் நஷ்டம் அடையக் கூடாது.

சில காரணங்களுக்காக ஏன் படமும் அதன் வெற்றியையும் பலியாக வேண்டும்? ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாகவுள்ளது. நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில் மாநாடு திரைப்படம் 2017 ல் வெளியான ‘A Day ‘ என்ற கொரியன் படத்தின் காபி என்றும்.

-விளம்பரம்-

மாநாடு டிரைலர் வெளியானதும் அதுபற்றி தெரிந்துகொண்ட ‘A Day ‘ படத்தின் தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்ததாகவும் மேலும் தங்களுடைய படத்தின் கதையை தழுவி எடுத்துள்ளதால் பெரும் தொகையை அந்த நிறுவனம் கேட்டதாகவும் அதற்கு சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்து வருவதால் தான் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்த வெங்கட் பிரபு சிரிக்கும் எமோஜிகளை பதிவிட்டு நக்கல் செய்ய, அந்த பதிவே டெலீட் செய்யப்பட்டு விட்டது.

Advertisement