ஒரு வெற்றிப்படத்துக்கே இந்த நிலையா ? 75 நாள் ஆச்சி, இன்னும் அந்த கணக்க கொடுக்கல ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் காட்டம்.

0
655
suresh
- Advertisement -

மாநாடு படத்துக்கே இந்த நிலைமைன்னா, எப்படி தொழில் செய்வது? என்று மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்புவும், தனுஷ்கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் மிரட்டி இருக்கிறார்கள். ஒரு புத்தம் புதிய வித்தியாசமான கதைக்களத்துடன் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் சிம்பு. எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான டைம் லூப் கான்செப்ட்டை கொண்டு படமாக்கியிருக்கிறார். மேலும், திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது.

- Advertisement -

மாநாடு படம் பற்றிய தகவல்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் தமிழக உரிமையை சுப்பையா கைப்பற்றி வெளியிட்டார். மேலும், இந்த படம் வெளியாகி நேற்றோடு 75 நாள் முடிவடைந்திருக்கிறது. இதனால் இதை கொண்டாடுவதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை சிலம்பரசன் ரசிகர்கள் செய்ய முடிவு பண்ணி இருந்தார்கள். இதற்காக சென்னையிலுள்ள கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ஏற்பாடு செய்து கொண்டாடி இருந்தார்கள். ஆனால், இந்த படத்தை தயாரிப்பாளர் நேற்றுடன் நிறுத்திக்கொண்டார்.

மாநாடு படத்தை கொண்டாடிய ரசிகர்கள்:

மேலும், நாளை மாநாடு படத்திற்குப் பதிலாக மன்மதன் திரையிடப்படும் என்று திரையரங்க நிர்வாகத்தினர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார்கள். இது பலருக்கும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமில்லாமல் என்ன காரணம்? என்று பல கேள்வி எழுப்பி இருந்தார்கள். ஆனால், சில மணி நேரங்களிலேயே திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் திரையிடப்படும் என்று தெரிவித்தார்கள். இந்த நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

சுரேஷ் காமாட்சி பதிவிட்ட பதிவு:

இவரின் பதிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்ன அவருடைய பதிவில் கூறியிருக்கிறார் என்றால், நேற்றோடு மாநாடு படம் வெளியாகி 75 நாள் முடிவடைந்தது. இதனால் ரோகிணி தியேட்டரில் சிம்பு ரசிகர் கோலாகலமாக கொண்டாடி இருந்தார்கள். ஆனால், 75 நாட்கள் ஆகியும் இன்னும் படத்தின் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப் படத்திற்கு இந்த நிலைமை என்றால்? மற்ற படங்களின் நிலைமை என்ன சொல்வது? என்று எனக்கு தெரியவில்லை. இப்படி இருந்தால் எப்படி தான் தொழில் செய்வது?

பிரச்சனைக்கு வழிவகுக்கும் சுரேஷ் காமாட்சி பதிவு:

நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போனால் என்ன தப்பு இருக்கு என்று யோசிக்க வைக்கிறார்கள். இவர்களின் இந்த செயலால் தமிழ் சினிமாவில் பல பிரச்சனைகள் வருகிறது. அதோடு தமிழ் சினிமா பின்னுக்கு செல்ல வாய்ப்பும் இருக்கிறது என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த பதிவின் மூலம் மீண்டும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே பிரச்சினை வெடிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இவரின் பதிவு சினிமா வட்டாரத்தில் மாவட்டத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

Advertisement