தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார்.
கடைசியாக இவர் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த தொடர்ந்து தனுஷ் ‘மாறன்’ படத்தில் நடித்து இருந்தார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்வெளியாகி இருக்கு. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். ஜகமே தந்திரம் படத்தின் மாபெரும் தோல்வி படத்தை தொடர்ந்து வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பபை ஏற்படுத்தி இருந்தது. அதே போல துருவங்கள் 16 படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா படம் வெளியானது.
கேலி செய்த ரசிகர் :
ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் கார்த்திக் நரேனின் ரசிகர்ககளும் மாறன் படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது. இந்த படத்தை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று நெட்டிசன் ஒருவர் கேலி செய்து கமன்ட் போட்டுள்ளார்.
கார்த்திக் நரேன் பதில் :
இதற்கு பதில் அளித்த கார்த்திக் நரேன் ‘உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்ததும் ப்ரோ’ என்று கமன்ட் செய்ய அதற்கு அந்த ரசிகரோ ‘இந்த அறிவ கதைல யூஸ் பண்ணுங்க நண்பா’ என்று கேலி செய்துள்ளார். அதே போல இன்னொரு நபர் ‘இதாச்சும் நல்லா இருக்குமா, இல்ல அப்புறம் சொல்றன்னு சமாளிச்சிருவயா’ என்று கேட்டுள்ளார். மாறன் படம் வெளியான போது இந்த படம் சத்யராஜ் நடித்த படத்தின் காப்பி என்று புதிய சர்ச்சை எழுந்தது.
‘உண்மையை அப்புறம் சொல்றேன்’
இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தளத்தில் ‘உண்மையை அப்புறம் சொல்றேன்’ என்று பதிவு செய்தார்.இந்த பதிவு சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் திடீரென அந்த பதிவை இயக்குனர் கார்த்திக் நரேன் டெலிட் செய்துவிட்டார். ஏற்கனவே மாறன் படத்தின் படப்பிடிப்பின் போது கார்த்திக் நரேன் திடீரென விலகி விட்டதாகவும், தனுஷ் தான் மீதி படத்தை இயக்கினார் என்ற ஒரு வதந்தியும் கிளம்பி இருந்தது.