மாரி 2-வின் மாஸான விமர்சனம்..!செஞ்சாரா இல்லையா மாரி..!

0
2474
Maari-2
- Advertisement -

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகியுள்ளது இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

படம்:- மாரி 2
இயக்குனர்:- பாலாஜி மோகன்  
நடிகர்கள்:- தனுஷ்,சாய் பல்லவி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத், வரலட்சுமி.
இசையமைப்பளார் :- யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு:- தனுஷ்  
வெளியான தேதி:-21-12-2018

- Advertisement -

கதைக்களம் :

நல்ல ரௌடியான மாரி மீண்டும் தனது சேட்டைகளை துவங்குவது போல கதை ஆரம்பிக்கிறது. இம்முறை வேறு இடம் வேறு,சில எதிரிகள். இந்த படத்தின் காளி(கிருஷ்ணா), மாரியின் (தனுஷ்) நெருங்கிய நண்பராக இருக்கிறார். கூடவே சனிக்கிழமை(ரோபோ ஷங்கர்) மற்றும் அடிதாங்கி (வினோத்).

மாரியை கொலை செய்ய பல பேர் பல முறை முயற்சி செய்கின்றனர். ஆனால், அவர் 100 முறை தப்பித்து விடுகிறார். இதற்காக அவருக்கு விழாவும் எடுக்கப்படுகிறது. ஊருக்கே சேட்டை செய்யும் மாரிக்கு காதல் மூலம் தொல்லை கொடுத்து வருகிறார் ஆனந்தி (சாய் பல்லவி).

-விளம்பரம்-

இப்படியே கொஞ்சம் ஜாலியாக கதை நகர்ந்து கொண்டிருக்க வில்லனின் எண்ட்ரி அவர் தான் பீஜா (டோவினோ தாமஸ்). அவர் ஒரு போதை பொருள் வியாபாரி ஆனால், மாரி கேங்க் போதை பொருள் மட்டும் கடத்தக்கூடாது என்று கொள்கையாக இருக்கின்றனர். இப்படி இருக்க மாரியின் நண்பரான காளி மட்டும் போதைக்கு அடிமையாக இருக்கிறார்.

மாரியை கொள்ளவேண்டும் என்று வில்லன் துடித்துக்கொண்டிருக்க வில்லன் சூழ்ச்சியால் மாரியின் நண்பரான காளி , மாரிக்கு எதிராக மாறிவிடுகிறார். இரண்டு கேங்க் சண்டைக்கு மத்தியில் ஒரு கெத்தான கலெக்டராக விஜயா வருகிறார் அவர் தான் வரலக்ஷ்மி.

அவர் இரண்டு ரவுடி கும்பலையும் அழிக்க வேண்டும் என்று கிளம்புகிறார். இறுதியில் நண்பனை இழந்து தனிமரமாக நின்ற மாரி வில்லனை அழித்தாரா. அவரது நண்பர் காளி என்ன செய்தார். சாய் பல்லவிக்கு என்னவானது என்பது தான் மீத கதை. அதை கமர்சியல் மசாலா பாணியில் கொண்டு செல்கிறார் இயக்குனர்.

ப்ளஸ் :

மாரி முதல் பாகத்தில் பயன்படுத்திய அதே பார்முலா தான் இங்கும் அங்கே காஜல் இங்கே சாய் பல்லவி, அங்கே விஜய் யேசுதாஸ் இங்கே டோவினோ தாமஸ். ஜாலியான வில்லன் ஹீரோ கதாபாத்திரம் அதே பழி வாங்கும் கதை. முதல் பாதி ஜாலியாக நகர்ந்து விடுகிறது. சாய் பல்லவியின் ஆட்டம் மட்டும் அமர்க்களம் சொல்ல்வே வேண்டியது இல்லை. அவர் இந்த படத்தில் ஒரு பொம்பள தனுஷ். ரோபோ ஷங்கர் மற்றும் வினோத் காமெடி இதிலும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. யுவனின் இசை படத்திற்கு பொருத்தம்.

மைனஸ் :

இது முதல் பாதியின் தொடக்கம் என்றாலும் மாரி முதல் பாகத்தில் இருந்தது போல தனுஷுக்கு கொஞ்சம் வேலை கம்மி தான். வில்லனின் நடிப்பு ஓகே என்றாலும் அவரது அமுல் பேபி தோற்றம் படத்திற்கு பொறந்த வில்லை(முதல் பாகத்தில் விஜய் ஜேசுதாஸை போட்டது போல). ஈசியாக கனிக்கூடிய இரண்டாவது பாதி. சனிக்கிழமை மற்றும் அடிதாங்கியை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.

இறுதி அலசல் :

மொத்தத்தில் மாரி முதல் பாகத்தை போன்று இது ஒரு மசாலா படம். ஆனால், மாரி முதல் பாகத்தில் இருந்த சில விடயங்கள் இதில் மிஸ்ஸிங் என்று தான் கூற வேண்டும். இருப்பினும் தனுஷ் ரசிகராக இருந்தால் படம் மிகவும் பிடிக்கும் பொது ரசிகர்களுக்கு ஓகே. இந்த படத்திற்கு Behind Talkies-ஸ்ஸின் மதிப்பு 6.5/10

இதையும் படியுங்க : சீதக்காதி படத்தின் விமர்சனம்..!

Advertisement