விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான ‘சீதக்காதி’ படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.
படம்:- சீதக்காதி
இயக்குனர்:- பாலாஜி தரணிதரன்
நடிகர்கள்:- விஜய் சேதுபதி, மௌலி, அர்ச்சனா, மகேந்திரன், கருணாகரன், ரம்யா நம்பீசன், காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர்
இசையமைப்பளார் :- கோவிந்த் வசந்தா
தயாரிப்பு:- பேஷன் ஸ்டுடியோஸ்
வெளியான தேதி:-20-12-2018
கதைக்களம் :
படத்தில் வரும் எந்தப் பாத்திரத்திற்கும் சீதக்காதி என பெயர் கிடையாது. ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்ற பழமொழிதான் படத்தின் அடிப்படையான ‘ஒன்லைன்’ என்பதால் இந்தப் பெயர்.
பழம்பெரும் மேடை கலைஞர் நாடகக் கலையை தனது உயிராக நேசிப்பவர் அய்யா ஆதிமூலம் . தனது சிறு வயதிலிருந்தே நாடகக் கலையில் அதிக ஆர்வம் கொண்ட அவருக்கு மனைவி , மகள் மற்றும் பேரன் இருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் 1950களில் ஆதிமூலம் நடித்த லவகுசாவில் ஆரம்பித்து, எண்பதுகளில் விசாரணை என்னும் நீதிமன்ற மேடை நாடகம் வரை மேடையில் நாடகங்கள் அரங்கேறும் காட்சிகள் காட்டப்படுகின்றன. ஒவ்வொரு தோற்றத்திலும் வயது முதிர்வுக்கான அழகியலுடன் அசத்துகிறார்
தமிழில் நாடகக் கலை உச்சத்தில் இருந்தபோது புகழ்பெற்று விளங்கிய அய்யா ஆதிமூலம் (விஜய் சேதுபதி), தன் கண் முன்பே அந்தக் கலைக்கு மதிப்பில்லாமல் போவதைப் பார்க்கிறார். குடும்பத்தில் பணத் தேவை தொடர்பான நெருக்கடிகளும் அதிகரிக்கின்றன. ஒரு நாள் நடித்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடுகிறார். ஆனால், அவரது கலை இறப்பதில்லை. அது எப்படி நடக்கிறது, அதனால் நடக்கும் விசித்திரங்கள் என்ன என்பதையே எதிர்பாராத விதத்தில் சொல்கிறது படம்.
ப்ளஸ் :
படத்தின் முழு பலம் விஜய் சேதுபதி தான் வெறும் 40 நிமிட காட்சியில் அவரது தாக்கம் படம் முழுக்க தொடரவைக்கிறது. படத்தில் உள்ள அத்தனை கலைஞர்களும் படத்திற்கு பலமாக இருக்கின்றனர். விஜய் சேதுபதி விட்டு சென்ற கதையை அனைவரும் சுமப்பது அற்புதம். ஆரம்பத்தில் கொஞ்சம் சோக கீதம் போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், பின்னணி இசை பல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
மைனஸ் :
படம் துவங்கி நீண்ட நேரத்திற்கு படத்தின் திசையே புரியாமல் சோர்வளிக்கிறது. பிறகு வரும் பல காட்சிகளில் நம்பகத்தன்மை ரொம்பவுமே மிஸ்ஸிங். “ஃபேண்டஸி” என்று ஒப்புக்கொண்டால்கூட, அதற்கான லாஜிக்கும்கூட சில இடங்களில் இல்லாமல்போவது ஏமாற்றமளிக்கிறது. ஒளிப்பதிவு ஆங்காங்கே கொஞ்சம் டல் மற்றும் படத்தில் இன்னும் கத்தரி போட்டு இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
இறுதி அலசல்:
ஒரு நல்ல கலைஞனுக்கு எப்போதும் மரணம் இல்லை. அவன் விட்டுச்சென்ற கலைகள் மூலம் அவன் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதை சொல்வதற்கான முயற்சிதான் இந்த சீதக்காதி. இதை அற்ப்புதமான அற்புதான கலைஞர்களை வைத்து அற்புதமாக கொடுத்துள்ளார் இயக்குனர். ஆனால், இந்த படம் பொறுமையாக திரைப்படத்தை ரசிக்கும் நபர்களுக்கு மட்டுமே. மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies- ன் மதிப்பு 7/10