சினிமாவில் நடிக்க வந்தது ஏன் ? மேடையில் ஓப்பனாக பேசிய வீரப்பன் மகள். இதோ வீடியோ.

0
697
Veerappan
- Advertisement -

சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். சந்தன கடத்தல் வீரப்பனை பற்றி பலர் அறிந்தாலும் ஒரு சிலர் அவரை பற்றி மறந்திருக்க கூடும். சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் என்று 184 பேரை கொன்றதற்காகவும் தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார்.

-விளம்பரம்-

மேலும் 130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். அது போக இவர் கன்னடத் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகரான இராஜ்குமாரை சந்தணக் கடத்தல் வீரப்பன் 2000 ஆம் ஆண்டு 30 ஆம் தேதி அன்று கடத்தினார். வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமார் அவரது கட்டுப்பாட்டில் 108 நாட்கள் இருந்த நிலையில் 2000 நவம்பர் 15 அன்று வீரப்பனால் விடுவிக்கப்பட்டார்.

- Advertisement -

பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காக தேடப்பட்டு வந்த வீரப்பன், 2004 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.

வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.அவர் நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது

-விளம்பரம்-

இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பேரரசு அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா நடிகர் கூல் சுரேஷ் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த விழாவில் பேசிய வீரப்பனின் மகள் விஜயலட்சுமி நடிக்க வந்ததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார் இந்த விழாவில் பேசிய அவர் சிறுவயதில் முதலே எனக்கு நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர்.

சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக கொண்டேன் நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement