சூர்யாவின் மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்த நடிகை குறித்த தகவலை தான் இங்கு பார்க்க போகிறோம். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சூரிய அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த படங்களில் ஒன்று தான் மாயாவி.

இந்த படம் இயக்குனர் சிங்கம் புலி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, சத்யன், சங்கிலி முருகன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்க்கப்பட்டது. மேலும், இந்த படத்தில் நடித்த மாற்று திறனாளி பெண் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அந்த படத்தில் “கடவுள் தந்த அழகிய வாழ்வு” என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வருடியவர் தான் நடிகை விஷ்ணுபிரியா.

Advertisement

மாயாவி பட நடிகை விஷ்ணுபிரியா:

இவரின் கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. இந்த படத்திற்கு பின் இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதோடு இவரை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் இவரது கள்ள காதலர் கொடூரமாக கொலை செய்யப்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. விஷ்ணுபிரியா சென்னையை சேர்ந்தவர். இவர் ரமேஷ் கிருஷ்ணா என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.

விஷ்ணுபிரியா கள்ளக்காதல்:

திருமணமாகி இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. ரமேஷ் கிருஷ்ணாவிற்கு உடல் நல பிரச்னையால் சில ஆண்டுகள் கொடைக்கானலில் தங்கி அவர் சிகிச்சை எடுத்து வந்து இருந்தார். அப்போது விஷ்ணுபிரியாவிற்கும் கார் ட்ரைவரான பிரபாகரன் என்பவருக்கு கள்ளகாதல் ஏற்பட்டது. இந்த விஷயத்தை விஷ்ணுபிரியாவின் தந்தை சூர்யா நாராயணன் கண்டு பிடித்து மிரட்டி இருக்கிறார். ஆனால், இதனை கேட்காமல் மீண்டும் பிரபாகரனுடன் பழகி வந்தார் நடிகை விஷ்ணுபிரியா.

Advertisement

விஷ்ணுபிரியா தந்தை செய்தது:

இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணுபிரியாவின் தந்தை சூர்யா நாராயணனை கூலி படையை வைத்து கார் ட்ரைவர் பிரபாகரனை கொலை செய்து இருந்தார். பிரபாகரனை கொலை செய்த நபர்கள் அவரது உடலை ஒரு பள்ளத்தில் வீசி விட்டு சென்று விட்டார்கள். இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து இருந்தார்கள். அதன் பின்னர் பிரபாகரனுக்கு இறுதியாக வந்த தொலைபேசி அழைப்பை வைத்து போலீஸ் விசாரித்து இருந்தார்கள்.

Advertisement

போலீஸ் விசாரணை:

அதை அடுத்து பிரபாகரனை கொலை செய்த செந்தில் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தார்கள்.
மேலும், இந்த கொலையை செய்ய சொன்ன விஷ்ணுபிரியாவின் தந்தை சூர்யா நாராயணனையும் போலீசார் தேடி வந்தது. அவர் கிடைத்தாரா? என்று தெரியவில்லை. அதற்கு விஷ்ணுபிரியா குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.

Advertisement