நாளுக்கு நாள் எகிறும் வசூல், முதல் நான்கு நாட்களுக்கு ‘மதகஜராஜா’ செய்திருக்கும் வசூல் எவ்வளவு தெரியுமா?

0
141
- Advertisement -

‘மத கஜ ராஜா’ படத்தின் வசூல் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோ பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

மதகஜராஜா படம் :

அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது. அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கை, கால்கள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? என்று கேட்டு இருந்தார்கள். பின், விஷாலுக்கு சாதாரண வைரல் காய்ச்சல் தான் என்று அவர் தரப்பில் கூறி இருந்தார்கள்.

படம் குறித்த தகவல் :

தற்போது விஷால் நன்றாக இருக்கிறார். மேலும், பொங்கலை முன்னிட்டு இப்படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படம் முதல் நாளில் 3 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 3 கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் ரூபாய் 6 கோடியும், நான்காவது நாளில் 6.5 கோடி ரூபாய் என வசூல் வேட்டை செய்து வருகிறது.

-விளம்பரம்-

தொடரும் வசூல் பேட்டை :

தற்போது வரை மட்டும் ரிலீஸ் ஆகி 4 நாட்களில் மட்டும் மதகஜராஜா படம் ரூபாய் 18.70 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் வேட்டை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஞாயிறு வரை கல்லூரி, பள்ளிகள் மற்றும் பல அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் படையெடுப்பது உறுதியாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல நகைச்சுவை திரைப்படம் வந்துள்ளதாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

படத்தின் கதை :

படத்தில் சிறு வயதிலிருந்தே விஷால், சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் நண்பர்களாக இருக்கின்றனர். வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் ஒரு திருமணத்தில் மீண்டும் சந்திக்கும் வசிப்பவர்கள் தன் நண்பர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதை விஷால் அறிகிறார். முக்கியமாக சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா ஆகிய இருவரும் ஒரே நபரால் பாதிக்கப்பட்டு இருப்பதைத் தெரிந்து கொண்ட விஷால் அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்படி அவர்கள் என்ன பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்கள்? விஷால் தன் நண்பர்களுடன் இணைந்து அந்த பிரச்சனையை சரி செய்தாரா? என்பதுதான் படத்தின் கதை.

Advertisement