சாக்லேட் பாயாக இருந்த மாதவன் வாட்ஸ் அப் Uncle ஆகிட்டார் – மாதவனை செய்யும் நெட்டிசன்கள். காரணம் அவரின் இந்த வீடியோ தான்.

0
162
madhavan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.

- Advertisement -

மாதவனின் திரைப்பயணம்:

அதோடு மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறார். தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்து இருக்கிறார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருக்கிறார்.

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்:

மேலும், இந்த படத்தில் கௌரவ வேடத்தில் இந்திப் பதிப்பில் ஷாருக்கானும், தமிழ் பதிப்பில் சூர்யாவும் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக மாதவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்திருக்கிறார். அதில் மாதவன் கூறியிருந்தது, விக்ரம் வேதா படம் முடிந்ததும் இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார்.

-விளம்பரம்-

மாதவன் அளித்த பேட்டி:

பாகிஸ்தான் ராணுவ ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று. நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது. பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பது ஏமாற்றமாக இருந்தது. அதனால் தான் நான் ராக்கெட்டரி படம் தயாரிக்க முடிவு செய்தேன். இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகள் மில்லியன் கணக்கில் பணத்தை செலவழித்து பல முயற்சிகள் செய்து மார்சில் ராக்கெட் லான்ச் செய்திருப்பார்கள். ஆனால், நம்மிடம் அந்த அளவிற்கு வசதி இல்லை என்றாலும் பஞ்சாங்கத்தில் எந்த நிமிடம், எந்த நொடியில் சென்றடையும் என்ற மேப் இருக்கிறது. அதை பயன்படுத்தி நம்முடைய ஆட்கள் ராக்கெட்டை செலுத்தி இருக்கிறார்கள். நம்முடைய பஞ்சாங்கத்தில் இருக்கிற விஷயம் வேறு எங்குமே கிடையாது என்று படம் குறித்தும், விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றியும் பல விஷயங்களை மாதவன் பகிர்ந்திருக்கிறார். இப்படி மாதவன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் கிண்டல், கேலி செய்து கலாய்த்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

Advertisement