‘இது மத மாற்று மரணம்னு எப்படி முடிவு பண்ணுவீங்க’ கேள்வி கேட்டவருக்கு சனம் ஷெட்டி கொடுத்த பதில்.

0
517
sanam
- Advertisement -

மதமாற்றத்த்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவிக்கு குரல் கொடுத்து சனம் ஷெட்டி பேசியதற்கு சோசியல் மீடியாவில் தன்னை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர் அரியலூரை சேர்ந்த மாணவி. இவர் அங்கு உள்ள மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் விடுதி வார்டன் சகாயமேரி அந்த மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாற சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். ஆனால், மாணவி மாறுவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் கோபம் அடைந்த விடுதி வார்டன் அனைத்து அறைகளையும் அந்த மாணவியை வைத்து சுத்தம் செய்யுமாறு துன்புறுத்தி கொடுமை செய்து இருக்கிறார். இதனால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி வருகிறது. இதற்கு பல தரப்பினரிடம் இருந்து கண்டனக்குரல் எழுந்து வருகிறது.

- Advertisement -

கைது செய்யப்பட்ட வார்டன் :

அதே போல இறப்பதற்கு முன்பாக மாணவி கொடுத்த மரண வாக்குமூலத்தின் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மானவிக்கு தொடர்ந்து மதம் மாறும்படி வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்ததாக  அவரது சித்தி குற்றம்சாட்டினார்.  லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாணவியின் தந்தை வழக்கு :

இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். மாணவியின் இறப்பிற்கு பல்வேரு சினிமா பிரபலங்களும் நியாயம் கேட்டு குரல் கொடுத்து வருகின்றனர். சிறுமியின் அந்த வாக்குமூல வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சனம் ஷெட்டி, உயிரழிந்த மாணவியின் மரணத்திற்கு தன் ஆதங்கத்தை தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-

குரல் கொடுத்த சனம் :

அதில் ‘மத மாஃபியாவிற்கு ஒரு அப்பாவி பெண்ணை இழப்பு கொடுத்துவிட்டு எப்படி நாம் பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறோம். ஏன் #JusticeForLavanya ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் கூட வரவில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறைகூறுவதற்க்கு பதிலாக இதற்கு காரணமான கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன்’என்று சனம் ஷெட்டி பதிவிட்டு இருந்தார்.

கேள்வி கேட்ட நபர் :

இவரின் இந்த பதிவை கண்ட நெட்டிசன் ஒருவர் ‘எப்படி நீங்கள் இது மத மாற்ற மரணம் என்று முடிவுக்கு வரலாம் ? பெண் குழந்தைகள் தினத்தில் பதிவிட எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால், நீங்கள் இதுகுறித்து பதிவிட்டு இருப்பது சோகம் தான் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த சனம் ‘நான் அணைத்து சமூகத்தையும் சமமாக மதிக்கிறேன். என்னுடைய இந்த பதிவு பாதிக்கப்பட்ட நபரின் வீடியோவில் சொன்ன விஷயத்தை பொறுத்தே இருக்கிறது. ஒரு சிலர் மதத்தை சாக்காக வைத்து சுரண்டுவதால் இப்படி எதிர்பாராத இறப்புகள் ஏற்பட்டு விடுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.’

Advertisement