தன்னுடைய விவாகரத்து சர்ச்சைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தன் சமையல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார். இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே சமையலில் பெரிய ஆர்வம். இருந்ததாலும், இவர் பெற்றோருக்காக பொறியியல் பட்டம் பெற்றார். ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை. பின் இவர் தன்னுடைய குடும்பத் தொழிலை 1999 ஆம் ஆண்டு தான் நடத்த தொடங்கினார். அதற்கு பின் இவர் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய கேட்டரிங் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:
தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான்.
அதுமட்டுமில்லாமல் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் பதிவிடும் சமையல் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. தற்போது இவர் மீண்டும் ஹீரோவாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த சர்ச்சை:
இவர் மிஸ் மேகி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்திருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாக மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுருதி வழக்கறிஞராக இருக்கிறார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் தான் ஜாய் கிரிஸ்டா.

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம்:
இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்வதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ஜாய், மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் சில போஸ்டர்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தார். குறிப்பாக காதலர் தினத்தன்று மாதம்படி ரங்கராஜ் என்னுடன் தான் இருந்தார். உலகம் உயிர் அவர்தான் என்று அவர் கொடுத்த கிஃப்ட்டை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஜாய், தன்னுடைய பெயருக்கு பின்னால் ரங்கராஜ் என்ற பெயரையும் இணைத்து இருக்கிறார். இதன் மூலம் மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் இருவருமே டேட்டிங் செய்வதாகவும், கூடிய விரைவிலேயே திருமணம் செய்வது கொள்வார்கள், ரங்கராஜ் தன்னுடைய முதல் மனைவி சுருதியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்பட்டது.

மாதம்பட்டி ரங்கராஜ் பதிலடி:
இதை அடுத்து ரங்கராஜ் மனைவி சுருதி, நான் தான் ரங்கராஜ் மனைவி. எங்களுக்குள் எந்த விவாகரத்தும் நடக்கவில்லை. தேவையில்லாத சர்ச்சைகளை பரப்ப வேண்டாம் என்று கூறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தன்னை குறித்த சர்ச்சை தொடர்பாக அளித்த பேட்டியில் ரங்கராஜ், சமூக வலைத்தளங்களில் வருகிற தகவல்களை பற்றி எனக்குமே தெரியும். என் வாழ்க்கை தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. சில விஷயங்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதை பற்றி எல்லாம் நான் ஏன் பேசணும்? அதேபோல் அவசியம் என்கிற நேரத்தில் நான் சோசியல் மீடியாவில் தெளிவாக டீடைலாக சொல்லுவேன். என்னுடைய குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ரொம்ப பர்சனல் விஷயங்களை பற்றி நான் பேச விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.






