மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் மனைவி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தன் சமையல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் மெஹந்தி சர்க்கஸ் பிரபலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார்.

இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே சமையலில் பெரிய ஆர்வம். இருந்ததாலும், இவர் பெற்றோருக்காக பொறியியல் பட்டம் பெற்றார். பின் இவர் தன்னுடைய குடும்பத் தொழிலை 1999 ஆம் ஆண்டு தான் நடத்த தொடங்கினார். முதன் முதலில் இவர் பெங்களூரில் தான் தங்களுடைய உணவகத்தை தொடங்கினார்.
பி மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:
அதற்கு பின் இவர் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய சமையல் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான். கடந்த ஆண்டு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருந்தார். தற்போது இவர் மீண்டும் ஹீரோவாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.

ரங்கராஜ் பற்றி சர்ச்சை:
இவர் மிஸ் மேகி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுருதி வழக்கறிஞராக இருக்கிறார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் தான் ஜாய் கிரிஸ்டா. இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ஜாய் கிரிஸ்டா, சில போஸ்ட்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தார்.

முதல் மனைவியுடன் ரங்கராஜ்:
இது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான் மாதம்பட்டி ரங்கராஜ், ஜோய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து இருந்தார். இது தொடர்பாக ஜோய் கிரிஸ்டலா போட்ட பதிவில், பேபி லோடிங் 2025. நான் கர்ப்பமாக இருக்கிறேன். ஆறு மாதம் கர்ப்பம் என்று கூறியிருந்தார். மேலும், நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இருவருமே பக்கத்தில் தான் அமர்ந்து இருந்தார்கள். ஆனால், ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து கூட பேசிக்கொள்ளவில்லை.
Hospital visits be like ❤️
— Joy Crizildaa (@joy_stylist) August 13, 2025
Raha Rangaraj #madhampattyrangaraj #ourlittlebundleofhappiness #parentstobe #PregnancyJourney #baby2025 pic.twitter.com/mE524TQjRq
மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஜாய்:
இப்படி இருக்கும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, ஜாய் தன்னுடைய செக்கப்புக்காக மருத்துவமனை சென்ற போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் தன்னுடைய பெயரை ஜாய் ரங்கராஜ் என்றும், தனது பிறக்கப் போகும் குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என்று பெயர் குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு பெண் குழந்தை தான் பிறக்கப் போவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி என்று சொல்லிக் கொள்ளும் வகையில் ஸ்ருதி- ஜாயின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இதற்கும் மாதம்பட்டி ரங்கராஜ் எந்த ஒரு பதிலுமே சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.






