மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம் குறித்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தன் சமையல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம்தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்தின் மூலம் தான் இவர் பிரபலம் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார். இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார்.

இவருக்கு சிறுவயதிலிருந்தே சமையலில் பெரிய ஆர்வம். இருந்ததாலும், இவர் பெற்றோருக்காக பொறியியல் பட்டம் பெற்றார். ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை. பின் இவர் தன்னுடைய குடும்பத் தொழிலை 1999 ஆம் ஆண்டு தான் நடத்த தொடங்கினார். முதன் முதலில் இவர் பெங்களூரில் தான் தங்களுடைய உணவகத்தை தொடங்கினார். அதற்கு பின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய கேட்டரிங் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான்.
மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் பதிவிடும் சமையல் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. தற்போது இவர் மீண்டும் ஹீரோவாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். இவர் மிஸ் மேகி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த சர்ச்சை:
இந்த படத்தினுடைய டீசர் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுருதி வழக்கறிஞராக இருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம்:
மேலும், மாதம்பட்டி ரங்கராஜுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் தான் ஜாய் கிரிஸ்டா. இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ஜாய், மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் சில போஸ்டர்கள் எல்லாம் வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக காதலர் தினத்தன்று மாதம்படி ரங்கராஜ் என்னுடன் தான் இருந்தார். உலகம் உயிர் அவர்தான் என்று அவர் கொடுத்த கிஃப்ட்டை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஜாய்,தன்னுடைய பெயருக்கு பின்னால் ரங்கராஜ் என்ற பெயரையும் இணைத்து இருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி பதிலடி:
இதன் மூலம் மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் இருவருமே டேட்டிங் செய்வதாகவும், கூடிய விரைவிலேயே திருமணம் செய்வது கொள்வார்கள், ரங்கராஜ் தன்னுடைய முதல் மனைவி சுருதியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரங்கராஜன் மனைவி சுருதி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் தான் ரங்கராஜ் மனைவி. எங்களுக்குள் எந்த விவாகரத்தும் நடக்கவில்லை. தேவையில்லாத சர்ச்சைகளை பரப்ப வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அதற்கு பின் ரங்கராஜ், இன்ஸ்டாவில் ஜாய்யை அன்பாலோ செய்து இருக்கிறார். ஆனால், ஜாய் மட்டும் ரங்கராஜ் தொடர்பாக போட்ட பதிவுகளை எல்லாம் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






