பக்கத்து வீட்டுக்காரரை தொந்தரவு செய்யக்கூடாது என்று போன் வாங்கிய மாதவன் – அதன் மூலம் கிடைத்த முதல் விளம்பர வாய்ப்பு.

0
518
madhavan
- Advertisement -

ஒரு போனால் என் வாழ்க்கையே மாறியது என்று மாதவன் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். நடுவில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் பிறகு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.

- Advertisement -

மாதவன் நடிக்கும் படம்:

தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்கிற்கு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அதோடு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

மாதவன் நடித்த வெப்சீரிஸ்:

அதோடு தற்போது மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் மாதவன் ‘Decoupled’ என்ற வெப்சீரிஸ்ஸில் நடித்து இருந்தார். இந்த வெப் சீரீஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் மாதவன் அவர்கள் கல்யாணமாலை நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய திரைப் பயணம் தொடங்கிய அனுபவத்தை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மும்பையில் இருந்த போது ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெரிய அளவில் வாடகை வீட்டில் இருக்க பணம் கிடையாது. அதனால் ஆறு அடுக்கு பில்டிங்கில் ஒரு பக்கம் சுவர் இருக்காது.

-விளம்பரம்-

ஆரம்ப கால வாழ்க்கை:

அங்கு தான் வாடகை கொஞ்சம் கம்மியாக இருக்கும். அந்த வீட்டில் தங்கி இருந்தேன். காலையில் புறாக்கள் தான் அலாரம் மாறி கூவி எழுப்பும். அதோடு அப்போது என்னிடம் மொபைல் எல்லாம் கிடையாது. பக்கத்து வீட்டில் இருந்த ஒரு வயதானவரின் போன் நம்பரை தான் என்னுடைய படத்தின் தயாரிப்பாளர் இடம் கொடுத்து இருந்தேன். அவர் இன்னிக்கி சூட்க்கு இங்கு வந்து விடுங்கள், சூட் இல்லை என்று எல்லா தகவலையும் அந்த மொபைல் நம்பருக்கு போன் பண்ணி சொல்லுவார். தயாரிப்பாளர்களுக்கு பொருத்தவரை போன் முக்கியமே தவிர அது எந்த இடத்தில் இருக்கிறது என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். அப்படி ஒரு முறை அவர் இரவு இரண்டு மணிக்கு போன் பண்ணி ஷூட்டிங் இல்லை என்று கூறி இருந்தார்.

போன் வாங்கிய பின் நடந்தது:

உடனே அந்த வயதானவர் என்னிடம் வந்து’தகவலை சொன்னார். எனக்கு அப்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. எப்படியாவது மொபைலை வாங்கியாக வேண்டும். பணம் போனால் போகிறது என்று நினைத்து 30,000ல் மொபைல் வாங்கினேன். அப்போதெல்லாம் மொபைல் வாங்குவதற்கு முன்பே நம்பர் கொடுத்து விடுவார்கள். நான் என்னுடைய தயாரிப்பாளரிடம் யாரிடமும் நம்பர் கொடுக்க வேண்டாம். ஒரு நிமிடத்திற்கு 16 ரூபாய். அதனால் எல்லோரிடமும் நம்பர் கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன். மொபைல் வாங்கி வெளியே கூட வரவில்லை. உடனே போன் வந்தது. எடுத்துப் பேசினேன். மாதவனா பேசுவது என்று கேட்க,ஆமாம் மாதவன் தான் பேசுறேன். 16 ரூபாய் போயிடும் சீக்கிரம் சொல்லுங்கள் என்று சொன்னேன்.

சினிமா வாய்ப்பு கிடைத்த அனுபவம்:

அப்போது அவர் நீங்க ஒரு விளம்பரத்தில் நடிக்க வேண்டும். நடிக்க இருந்த நபர் உடல்நிலை சரியில்லாமல் வரவில்லை. நீங்கள் அந்த விளம்பர நடிக்கிறீர்களா? என்று கேட்டார். நானும் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டேன். அவர் ஐம்பதாயிரம் ரூபாய் தருவதாக பேசி இருந்தோம். அதையே உங்களுக்கு தருகிறேன் என்று சொன்னார். அந்த விளம்பரத்தில் நடித்த போது தான் எனக்கு அந்த விளம்பரத்தின் கேமராமேன் மூலமாக சந்தோஷ் சிவன் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னுடைய புகைப்படத்தை வாங்கிக்கொண்டு மணிரத்னத்திடம் கொடுத்தார். அப்படிதான் படங்களில் நடித்து இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி மாதவன் பேசி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement