‘ATM வாசல்ல நின்னு இருந்தா தெரிஞ்சி இருக்கும்’ – கேன்ஸ் விழாவில் மோடி குறித்து மேடி சொன்ன கருத்தால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

0
239
modi
- Advertisement -

கேன்ஸ் திரைப்பட விழாவில் மோடியைப் பற்றி மாதவன் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார். அதன் பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். நடுவில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.

- Advertisement -

மாதவன் நடிக்கும் படம்:

தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. அதோடு மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் மோடியைப் பற்றி மாதவன் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஒன்று கேன்ஸ் திரைப்பட விழா.

கேன்ஸ் விழா:

இந்த விழாவில் கலந்து கொள்வதும், தங்களது படங்கள் திரையிடப்படுவதையும் மிகப்பெரிய கவுரவமாக சினிமா நட்சத்திரங்கள் கருதி வருகின்றனர். அந்த வகையில் தற்போது 75 வது கேன்ஸ் திரைப்பட விழா அண்மையில் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. மேலும், வருகிற மே 28 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவில் ஏராளமான படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. மேலும், இந்த விழாவில் இசையமைப்பாளர் உலக நாயகன் கமலஹாசன், ஏ ஆர் ரகுமான், பார்த்திபன், பா ரஞ்சித், மாதவன், தமன்னா, பாலிவுட் திரையுலகில் ஊர்வசி ரெளட்டாலா, தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் பச்சன்
உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

விழாவில் மாதவன் கூறியது:

இந்நிலையில் மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதில் மாதவனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பின் விழாவில் கலந்து கொண்ட மாதவன் பிரதமர் மோடியை பற்றி கூறியிருந்தது, பிரதமர் மோடியின் “மைக்ரோ எகானாமி” திட்டம் வெற்றி பெற்றது. மோடி அவர்கள் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்தவோ, வங்கி கணக்கை சரியாக கையாளத் தெரியாத ஒரு நாட்டில் டிஜிட்டல் மையத்தை உருவாக்கினார். இது சாத்தியமில்லை, பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகம் முழுவதும் சந்தேகத்துடன் பார்த்து வந்தனர்

மோடி திட்டம் குறித்து மாதவன் சொன்னது:

ஆனால், இரண்டு ஆண்டுகளில் கதையை மாறிவிட்டது என்று மைக்ரோ பொருளாதாரத்தை பயன்படுத்துவதில் இந்தியாவும் ஒன்றாக மாறியிருக்கிறது. விவசாயிகளின் வங்கியில் பணம் இருக்கிறதா என்பதை அறிய பெரிதாக கல்வி அறிவு தேவையில்லை. தொலைபேசி இருந்தால் போதும் என்ற நிலை வந்து இருக்கிறது. அது தான் புதிய இந்தியா என்று மாதவன் கூறி இருக்கிறார். இப்படி இவர் கூறி இருந்ததை இந்தியா குழுவை வழிநடத்தும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

தற்போது இது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மாதவனின் இந்த பேச்சை பா ஜ க ஆதரவாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், ஒரு சிலரோ மாதவனின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எங்களை போல Atm வாசாலில் நின்று இருந்தால் தெரிந்து இருக்கும் என்று சிலர் கமன்ட் போட்டுள்ளார்கள். ஒரு சிலரோ விரைவில் உங்களுக்கு ஒரு பத்ம விருது கிடைத்துவிடும் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement