ராக்கெட் லாஞ்சையும் பஞ்சாங்கத்தையும் ஒப்பிட்டு தான் பேசிய கருத்து குறித்து முதல் முறையாக மாதவன் விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் பாருங்க : சக்கு சக்கு பத்திகிச்சு, தலையில பத்திகிச்சு – அலிகானின் பழைய வீடியோவை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன்.
ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்:
அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
பஞ்சாங்கம் குறித்து மாதவன் சொன்னது:
இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்து இருக்கிறார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கௌரவ வேடத்தில் இந்திப் பதிப்பில் ஷாருக்கானும், தமிழ் பதிப்பில் சூர்யாவும் நடித்திருக்கிறார்கள்.பெரும் பொருட் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ஜூலை 1-ஆம் தேதி திரைக்கு வரப்போகிறது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறார்.
கேலிக்கு உள்ளான மாதவனின் பேச்சு :
இந்நிலையில் இது தொடர்பாக மாதவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர், அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33 வது முறையில் தான் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றது. ஆனால், இந்தியா சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு பஞ்சாங்கத்தின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு செவ்வாய்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பி இருந்தது என்று கூறி இருந்தார்.
மாதவன் விளக்கம் :
இப்படி இவர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கேலிக்கு உள்ளாகி இருக்கும் தனது பேச்சு குறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ள மாதவன் ‘”அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இதற்கெல்லாம் (விமர்சனங்களுக்கு) தகுதியானவன்தான். எனது அறியாமையை உணர்கிறேன். அதே நேரம் இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது. அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார்.’ என்று பதிவிட்டுள்ளார்.