தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் வித்யாசமான கதை காலங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது அற்பிதமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான நடிகர். தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.
நடிகர் மாதவன் தற்போது இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழக்கையை மையமாக வைத்து ஒரு புதிய படத்தின் நடித்து வருகிறார். நம்பி நாராயனனின் வாழ்க்கையில் நடந்த துரோகங்களையும, மறைக்கபட்ட உண்மைகளையும் இந்த படத்தின் மூலம் உலகிற்கு வெளிக்கொண்டு வர விருக்கின்றனர்.
இந்த படத்திற்காக மாதவன் மேற்கொண்ட கஷ்டங்களை அனைவரும் பாராட்டினார்கள். ஆனால், சமீபத்தில் பொது நலன் கருதி மாதவன் போட்ட ட்வீட் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்தில் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில்’மக்கள் அனைவரும் காலி இடங்களில் இந்திய மரங்களான வேப்ப மரங்களை நட்டு வளர்க்கவேண்டும், அது வளர்ந்தபிறகு 5000 வரை தமிழ்நாட்டில் விலை போகிறது என பதிவிட்டிருந்தார். ‘
இந்த பதிவினை அனைவரும் பாராட்டினார். ஆனால், இதே பதிவை அவர் கூகுள் தமிழ் மொழி பெயர்ப்பை பயன்படுத்தி தமிழில் பதிவிட்டார். ஆனால், அது பலருக்கும் புரியாத வடிவில் இருந்ததால் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.