பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சில தினங்களாகவே இந்தியா முழுவதும் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமா துறையில் சுஷாந்த் சிங்க்கு ஏற்பட்ட மன அழுத்தம் தான் அவரின் தற்கொலை காரணம் என்று சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வந்து கொண்டு இருக்கின்றன. வாரிசு நடிகர்கள் வளர்ந்து வரும் நடிகர்களை வளர விடாமல் பின்னாடி தள்ளுகிறார்கள். இந்த நிலைமை இந்தியா முழுவதும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெட்டிசன்கள் பாலிவுட் மற்றும் கோலிவுட் இரண்டையும் சம்மந்தப்படுத்தி சுஷாந்த் மன அழுத்தத்திற்கு மீம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் பங்கேற்ற மாதவன் ஷாருக்கானை ட்ரோல் செய்யும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் மாதவன் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியை சாருக் கான், சைப் அலி கான் ஆகியோர் நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் மாதவனிடம் ஷாருக் கான், சைப் அலிகான் இருவரும் சேர்ந்து தமிழில் திட்டும் படி கேட்டு உள்ளனர். அதற்கு மாதவன் அவர்கள் போங்கடா..கிறுக்கு கதாநாயகர்களா? என்று திட்டி உள்ளார்.
இதைக் கேட்டு அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்து போனது. தற்போது அந்த வீடியோ ஷாருக்கானை ட்ரோல் செய்யும் விதமாக நெட்டிசன்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அதே போல் சுஷாந்த்தை விருது விழா ஒன்றில் முன்னணி நடிகராக திகழும் ஷாருக் கான் மேடையில் கிண்டலடித்து அவமானப்படுத்திய மீம்ஸ் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .