கமல் ஹாசனுக்கு முன்பே 1999 – லேயே அந்த சாதனையை செய்த மாதவன். என்ன தெரியுமா?

0
7344
madhvankamal
- Advertisement -

தமிழ் திரையுலகில் 2000-யில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளி வந்த திரைப்படம் ‘அலைபாயுதே’. இந்த படத்தில் கதையின் நாயகனாக பிரபல நடிகர் மாதவன் நடித்திருந்தார். நடிகர் மாதவன் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் இது தானாம். இதில் மாதவனுக்கு ஜோடியாக பிரபல நடிகர் ‘தல’ அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படத்தினை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இதில் நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஷாலினி ஆகிய இருவரின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இருவரும் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். படத்தில் பெரிதும் பேசப்பட்ட ரயிலில் இடம்பெற்ற காட்சியின் படப்பிடிப்பின் போது , நடிகர் மாதவன் அவரது மனைவியும், அப்போதைய காதலியுமான சரிதாவை மனதில் நினைத்துக் கொண்டு தான் நடித்தாராம்.

இதையும் பாருங்க : கஷ்டப்படுகிறோம் பெரிய நடிகர்கள் உதவி செய்யுங்கள். கண்ணீர் விட்ட துணை நடிர்களுக்கு உதவி செய்த நடிகர்.

- Advertisement -

அதேபோல், தான் ஷாலினியும் அஜித்தை மனதில் நினைத்துக் கொண்டு தான் நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி இப்படம் வெளி வந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டது குறித்து ட்விட்டரில் ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ‘அலைபாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் சடுகுடு’ என்ற பாடலின் வீடியோவை ஷேரிட்டு, “இப்பாடலில் நடிகர் மாதவன் செம சூப்பராக இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனை ரீட்வீட் செய்த மாதவன் “இப்பாடல் ரிவர்ஸில் படமாக்கப்பட்டது.

இதையும் பாருங்க : அவர்களுக்கு மட்டும் அபராதம். விதிகளை மீறி திருமணம் நடத்திய இவர்களுக்கு இல்லையா.குஷ்பூ விளாசல்.

-விளம்பரம்-

ஆகையால், நான் ரிவர்ஸ் ஆர்டருக்கு தகுந்தாற்போல் தான் வாயசைத்து பாடினேன். அதுவும் ஹீரோவான எனது முதல் படத்திலேயே” என்று கூறியிருந்தார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் “அப்போ, கமல் ஹாசன் – மாதவன் இணைந்து நடித்த ‘மன்மதன் அம்பு’ (2010) படத்தில் இடம்பெற்ற ‘நீல வானம்’ என்ற பாடல் தமிழில் படமாக்கப்பட்ட முதல் ரிவர்ஸ் பாடல் இல்லையா?” என்று மாதவனிடம் கேட்டிருந்தார். அதற்கு மாதவன் “ஆம் முதலில் நாங்கள் தான் அதை 1999-ஆம் ஆண்டே செய்து விட்டோம்” என்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Advertisement