அவர்களுக்கு மட்டும் அபராதம். விதிகளை மீறி திருமணம் நடத்திய இவர்களுக்கு இல்லையா.குஷ்பூ விளாசல்.

0
9125
kushboo
- Advertisement -

கொரோவினால் ஒட்டுமொத்த உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14378 ஆகவும், 480 பேர் பலியாகியும் உள்ளார்கள். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Police deny lockdown violation at wedding of former PM's grandson

மேலும், ஊரடங்கு நிலையில் இருக்கும் போது கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தன்னுடைய மகன் திருமணத்தை சமூக இடைவெளி இன்றி நடித்தி உள்ளார். இதற்கு பலர் கண்டனம் தெறித்து வருகிறார்கள். கொரோனா வைரஸால் கர்நாடகாவில் 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றை 20 பேர்களுக்கு மேல் கூடாமல் நடத்த வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : வெளிநாட்டில் நயனுடன் எடுத்த புகைப்படத்தை வீட்டில் பிரேம் போட்டு வைத்துள்ள விக்கி. எந்த புகைப்படம்னு பாருங்க.

- Advertisement -

இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமிக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் பேத்தியான ரேவதிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவலால் பெங்களூரு சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் குமாரசாமி தனது சொந்த தொகுதியான ராமநகராவில் உள்ள பண்ணை வீட்டிற்கு திருமணத்தை நடத்தினார். உறவினர்கள் உடன் சடங்கு சம்பிராதயங்களுடன் பண்ணை வீட்டில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது

இந்த திருமணத்தில் சமூக விலகல் கடைப்பிடிக்காது திருமண புகைப்படங்களில் தெரிந்தது. விழாவில் பங்கேற்ற யாரும் முகக்கவசங்களும் அணியவில்லை. இந்நிலையில் இது குறித்து குஷ்பு அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, விதிமுறைகள் என்பது அனைவருக்கும் ஒன்று தான்.

இதையும் பாருங்க : தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை – சிபிராஜ் பெருமிதம்.

-விளம்பரம்-

சமீபத்தில் இதே மாதிரி சூரத்தில் ஒரு குடும்பம் நடத்திய திருமணத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் தற்போது கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் அவர் குடும்பத்தினர் தவறு செய்து உள்ளார்கள். அவர்களுக்கு விதிமுறை ஒன்றும் கிடையாதா? கொரோனா வைரஸ் ஜாதி, மதம் மற்றும் பணக்காரன்,ஏழை என்பதை எல்லாம் பார்த்து வருவதில்லை. சட்டத்தை உருவாக்குபவர்கள் ஏன் இப்படி சட்டத்தை மீறுகிறார்கள்.

படித்த குடும்பத்தினர்கள் தான் நல்வழிகள் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களே விதிமுறைகளை மீறுவது மிகவும் அசிங்கமான ஒன்று என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நடிகை ரவீனா டண்டன் தன்னுடைய ட்விட்டரில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வீட்டு திருமணம் குறித்து கிண்டலும் கேலியும் செய்து உள்ளார். தற்போது கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வீட்டு திருமணம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement