அடையாளம் தெரியாமல் மாறிப்போன மதுர பட நடிகை. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
36364
madhurey

மதுர படம் நடிகையா??? இவர் என்று ரசிகர்கள் ஷாக் ஆகும் அளவிற்கு மாறி போய் உள்ளார் நடிகை ரக்ஷிதா. தற்போது நடிகை ரக்ஷிதா அவர்கள் என்ன செய்து இருக்கிறார்? தற்போதைய நிலை என்பதைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.. இவர் 1984 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா. சினிமாவுக்காக ரக்ஷிதா என்று பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். இவருடைய அப்பா கௌரி சங்கர் என்பவர் சினிமாவில் பிரபலமான சினிமாடோக்ராஃபர் ஆவார். மேலும், இவருடைய அம்மா மம்தா ராவ் அவர்களும் பிரபலமான நடிகை ஆவார். இதன் மூலம் தான் நடிகை ரக்ஷிதாவுக்கு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டு இயக்குனர் புனித் ராஜ்குமாரின் இயக்கத்தில் ‘அப்பு’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் நடிகை ரக்ஷிதா சினிமா உலகிற்கு வந்தார்.

பின் நடிகை ரக்ஷிதா அவர்கள் 2003 ஆம் ஆண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளியான ‘தம்’ என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இந்த படத்தில் வந்த ‘சாணக்கியா சாணக்கியா’ என்ற பாடல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஆனால், அதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரக்ஷிதா தான் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்திற்கு பின்னர் அவர் தமிழ் மொழி படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கில் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், நாகர்ஜுனா, ரவி தேஜா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

அதோடு இவர் கன்னடம், தெலுங்கில் தான் அதிகம் வலம் வந்தார் என்று சொல்லலாம். சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் அரசியலில் குதித்தார். பின்னர் பாஜக கட்சியில் சேர்ந்தார். சில வருடமாகவே அரசியலில் தான் வலம் வந்து கொண்டு இருந்தார் என்று கூறப்படுகிறது. பிறகு நடிகை ரக்ஷிதா கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்புக்கு குட் பாய் சொல்லி விட்டார். பின் குடும்ப வாழ்க்கையிலேயே செட்டிலாகி விட்டார் என்று சொல்லலாம். மேலும்,இவர்களுக்கு சூர்யா என்ற பையன் உள்ளான்.

அதோடு நடிகை ரக்ஷிதா அவர்கள் ஒரு குழந்தைக்கு தாயாகிய உடன் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு ஊதி போய் இருக்கிறார். மேலும், இவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இது நடிகை ரக்சிதாவா?? என அதிர்ந்து போய் உள்ளார்கள் என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் மதுர படத்தில் இருந்த கதாநாயகியா?? என்று பலரும் கேட்கும் அளவிற்கு மாறி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement