அவமானபடுத்தி ரஹ்மானை டிஸ்மிஸ் செய்த மதுவந்தி குடும்பத்தின் பள்ளி – மதுவந்தி கொடுத்துள்ள விளக்கத்தை பாருங்க.

0
389
arrahman
- Advertisement -

கடந்த ஆண்டு சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையைஏற்படுத்தி இருந்தது. ராஜகோபாலன் என்ற அந்த ஆசிரியர், மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருந்தது. நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-

கடந்த 23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருந்தது . எனவே, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில் இந்த சர்ச்சை சமூக வலைதளத்தில் வெடிக்க ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

- Advertisement -

PSBB பள்ளியில் படித்த ரஹ்மான் :

அவர் மீது போஸ்க்கோ உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கும் தொடரப்பட்டது. இந்த சம்பவத்தில் இருந்து நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவந்தனர் . அதே போல இந்த பள்ளி குறித்து பல செய்திகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மான், தனது பள்ளியில் ஏற்பட்ட அவமானம் பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்றை பலரும் பகிர்ந்து வந்தனர்.

அவமதித்த ஆசிரியர் :

அந்த வீடியோவில் பேசிய அவர், நான் பள்ளியில் படிக்கும்போது அடிக்கடி பள்ளிக்கு போகாமல் இருந்திருக்கிறேன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பாதியில் வந்துவிட்டேன் என்று கூறிய பின்னர் பள்ளியில் படிக்கும்போது தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து பேசினார். அதில், உங்கள்பையன கோடம்பாக்கம் தெருவிற்கு கூட்டிச் செல்லுங்கள் அங்கு இருப்பவர்கள் காசு போடுவார்கள். அவரை மீண்டும் ஸ்கூலுக்கு அழைத்து வர வேண்டாம் என்று கூறியதாக ஏ ஆர் ரகுமான் அந்த வீடியோவில்பேசி இருந்தார்.

-விளம்பரம்-

ஏஆர் ரஹ்மான் இந்த வீடியோவை பகிர்ந்து வரும் பலர் இது PSBB பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தான் என்று கூறிவந்தனர். அதே போல ஏ ஆர் ரஹ்மான் விஜய் டிவியில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூட இந்த பள்ளி குறித்து பேசி இருப்பார். இந்த பள்ளியில் இருந்து தான் ஏ ஆர் ரஹ்மான் பாதியில் வந்துவிட்டார். அதே போல ஏர் ஆர் ரஹ்மான் PSBB பள்ளியில் 1985 ஆம் ஆண்டு ஆவரது வகுப்பு படிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது.

மதுவந்தியின் விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மதுவந்தி, இந்த விவகாரம் குறித்து பேசுகையில் ‘ஏ ஆர் ரகுமான் இதை என் பாட்டியிடமே சொல்லி சிரித்து இருக்கிறார் இது ஒன்றும் சர்ச்சைக்குரிய விஷயம் எல்லாம் கிடையாது அந்த தருணத்தில் இருந்த ஆசிரியர் இப்படி சொல்லி இருக்கிறார் அதை நான் சரி என்று நியாயப்படுத்த விரும்பவில்லை ஆனால் அதை ரகுமான் சார் கூட இன்றுவரை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அவர் ரோஜா படம் செய்த போது அவரை அழைத்து பாராட்டியது எங்கள் பள்ளி தான் ஒருவேளை அவருக்கு பழனி மீது காழ்ப்புணர்ச்சி இருந்திருந்தால் அவர் வந்திருக்க மாட்டார்’ என்று கூறியுள்ளார்.

Advertisement