முத்தத்தால் பட வாய்ப்புகளை இழந்தேன்..! புலம்பும் பிரபல நடிகை.!

0
358
madona-sebastin

மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிவீன் பாலி நடித்த “ப்ரேமம்” படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மடோனா சபாஸ்டியன். அந்த படத்திற்கு பின்னர் தமிழில் விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும் ‘ என்று படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார்.

actress madona

நடிகை மடோனா சபாஸ்டியன் தமிழ், தெலுகு, மலையாளம் என்று நடித்து வந்தாலும். இவருக்கு அதிகப்படியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் அம்மணி எப்போதும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மடோனா சபாஸ்டியன் முத்த காட்சிகளில் நடிக்க மறுத்ததால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் தெரிவிக்கையில் ” நான் கண்டிப்பாக ஆபாசமாக காட்சிகளிலும் ,முகம் சுழிக்கும் காட்சிகளில் எப்போதுமே நடிக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கும் குடும்பம்,தங்கை எல்லாம் இருக்கின்றனர். அவர்களோடு நேரம் செலவழிப்பதே என் முதல் பொழுதுபோக்கு. நான் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் பல பட வாய்ப்புகளையும் இழந்திருக்கிறேன்.

actress madona

அதே போல எனக்கு கூச்ச சுபாவம் உண்டு, நான் பொதுவாக மற்றவர்களிடம் பேசவே பயப்படுவேன். நான் முதல் முறையாக சினிமாவில் கட்டிப்பிடிக்கும் காட்சியில் நடித்தபோது அம்மாவுக்கு போன் செய்து அழுதுவிட்டேன். அந்தளவுக்கு .எனக்கு கனவு கதாபாத்திரம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த மொழிப் படமாக இருந்தாலும் நடிப்பேன்.” என்று கூறியுள்ளார்.