சிங்கிள் சிங்கிள்னு சொல்லிட்டு சத்தமில்லாமல் திருமண நிச்சயத்தை முடித்த பரிதாபங்கள் சுதாகர். பொண்ணு யார் தெரியுமா ?

0
456
gopi
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியா மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள். நடிப்பதற்கு சோசியல் மீடியா ஒரு பிளாட்பார்ம் ஆக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா நடிப்பதற்கு வாய்ப்புகள் மட்டுமின்றி பணம் சம்பாதிப்பதற்கும் வழிவகை செய்கிறது. மேலும், சமூக வலைத்தளங்களின் மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் யூடியூபில் வீடியோ போடுவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த அளவுக்கு இவர்களின் சேனல் இளைஞர் ரசிகர்களை கொண்டவர்கள் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இவர்கள் விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பின் அங்கு அவர்களுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் யூடியூபில் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி இருந்தார்கள்.

- Advertisement -

மேலும், அதில் அவர்கள் வீடியோக்களை போட்டு வந்தார்கள். அது மக்கள் மத்தியில் பிரபலமாக ஆனது. அதோடு இந்தளவிற்கு மக்கள் மத்தியில் இவர்களை ரசிக்க வைத்ததற்கு காரணம், அன்றாடம் மக்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளை தங்களுடைய பாணியில் நகைச்சுவை கலந்து மக்கள் கொடுத்து வருகின்றனர் கோபி மற்றும் சுதாகர். இதை இவர்கள் தங்கள் நண்பர்களோடு இணைந்து செய்து வருகின்றனர். இதன் மூலம் இவர்கள் சில படங்களிலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே மாதிரி இவர்கள் சொந்தமாக படம் இயக்கும் கனவை நனவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுதாகர் உடைய வீடியோ, புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதுஎன்வென்றால், சுதாகருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சுதாகர் தன்னுடைய நிச்சயதார்த்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த செய்தி அறிந்ததும் ரசிகர்கள் சந்தோசத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து எப்போது திருமணம்? என்றும் கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement