எந்திரன் திருட்டு கதையா..? ஷங்கருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

0
183
yenthiran

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயரை கொண்டவர் இயக்குனர் ஷங்கர் இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம். தற்போது ரஜினியை வைத்து “எந்திரன் 2” மற்றும் கமலை வைத்து “இந்தியன் 2” போன்ற படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் எடுத்த எந்திரன் முதல் பாகம் மீது வழக்கு தொடரப்பட்டு இயக்குனர் ஷங்கருக்கு அபராதமும் விதிக்கப்டுள்ளது.

Enthiran

கடந்த 2010 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான “எந்திரன்” படம் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டது.தமிழ், தெலுகு, ஹிந்தி என இந்தியா முழுவதும் உள்ள பல மொழிகளில் வெளியான இந்த படம் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்தது. இயக்குனர் ஷங்கரின் சொந்த கதை என்று அவரே கூறி இருந்த நிலையில், எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்றும் தன்னிடம் இருந்து அந்த கதையை திருடி விட்டனர் என்றும் எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் என்பவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் , தனது சொந்த கதையை இயக்குனர் ஷங்கர் திருடிவிட்டார் என்றும் இதற்காக அவர் எனக்கு 1 கோடி ரூபாய் பணத்தை இழப்பு தொகையாக வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடைபெற்றது. ஆனால், இயக்குனர் ஷங்கர் இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.

Rajini

இயக்குனர் ஷங்கர் ஆஜராகாத காரணத்தை நீதி மன்றத்தில் சமர்ப்பித்த இயக்குனர் ஷங்கர் தரப்பினர், அவர் படபிடிப்பிற்காக வெளியூரில் இருப்பதால் அவரால் நேரில் ஆஜராகவில்லை என்று தெரிவித்திருந்தனர். ஆனால் , இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி ஏற்கன்வே போதுமான அவகாவாசம் கொடுக்கப்பட்டு விட்டது என்வே ஷங்கர் நீதி மன்றத்தில் ஆஜராகாததால் 1000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 12 ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.