பாரதிராஜா படத்தில் ஹீரோயினாக அறிமுகம், 20 ஆண்டுகள் கழித்து ரீ-என்ட்ரி. மெட்ராஸ் பட அம்மா, நடிகை ரமாவின் கடந்து வந்த பாதை.

0
1298
madras
- Advertisement -

சினிமாவைப் பொறுத்தவரை 80ஸ் 90ஸ் காலத்தில் நடித்த எத்தனையோ நடிகர் நடிகர்கள் தற்போது சீனியர் நடிகர்களாக புரமோஷன் பெற்று தந்தை, அண்ணன்,மாமா, அக்கா அத்தை அம்மா என்று பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டுமே அக்மார்க் அம்மா கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். அந்தவகையில் கார்த்தி நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரை படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்து பலரின் மனதை ஈர்த்தவர் நடிகை ரமா. பொதுவாக தற்போது இருக்கும் காலங்களில் அம்மா அத்தை அக்கா என்று கதாபாத்திரத்தில் நடித்து வரும் பல்வேறு நடிகைகள் ஒரு காலத்தில் கதாநாயகிகளாக நடித்தவர்கள் தான்.

-விளம்பரம்-

அதற்கு ராமா மட்டும் விதிவிலக்கல்ல இவரும் தமிழ் சினிமாவில் ஒரு நாயகியாக அறிமுகமானவர்தான் இவரை அறிமுகம் செய்தது வேறு யாரும் கிடையாது மண்வாசனை இயக்குனர் பாரதிராஜா தான் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான என் உயிர் தோழன் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் ரமா இந்த படத்தில் இடம்பெற்ற ஏ ராசாத்தி என்ற பாடல் இன்றளவும் பிரபலம் தான்.

இதையும் பாருங்க : அவரை வன்னியர் சமூகமாக அடையாளம் காட்டியிருப்பது உள்நோக்க அரசியல் – சர்ச்சையை கிளப்பிய மோகன்.

- Advertisement -

1990க்கு பின்னர் ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நாயகியாக நடிக்கவில்லை. பின்னர் 20 ஆண்டுகள் கழித்து ஜெய் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தில் நாயகியின் அம்மாவாக நடித்து சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் கனா, திருநாள், பிகில் என்று பல படங்களில் அம்மாவாக நடித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய ரமா, என்னுடைய இளமைக் காலத்தில் தடகளம், சைக்கிளிங், நீச்சல் என்று பல விளையாட்டுகளில் கவனம் செலுத்தி தேசிய அளவில் விளையாடி இருக்கிறேன். எதிர்காலத்தில் விளையாட்டு துறையில் தான் இருப்பேன் என நினைத்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக சினிமாவிற்கு வந்து விட்டேன். ஆனால், கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அம்மாவாக நடித்த போது இளமைகால ஸ்போர்ட்ஸ் நினைவுகள் அடிக்கடி வந்து போகும்.

-விளம்பரம்-

அதை ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் கூட பகிர்ந்திருக்கிறேன். என்னுடைய மகன் கெளதம் ராஜேந்திரன், அவனும் ஒரு ஸ்போர்ட்ஸ் பிளேயர் தான். அவன் ஒரு விளையாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். மேலும், எனக்கு நந்தினி ராஜேந்திரன் என்ற மகளும் இருக்கிறார். தற்போது படங்களில் நடித்து வந்தாலும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் விளையாட்டிலும் கவனம் செலுத்த ஆசைப்படுகிறேன். விரைவில் சென்னை அல்லது மலேசியாவில் ஒரு ஹோட்டலை ஆரம்பிக்கவும் திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement