ஆக்சன் திரில்லரான ‘மெட்ராஸ்காரன்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
40
- Advertisement -

ரங்கோலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மெட்ராஸ்காரன். இந்த படத்தில் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தை எஸ்.ஆர். புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் நாயகன் ஷேன் சென்னையை சேர்ந்தவர். இவர் கதாநாயகி நிஹாரிகாவை காதலிக்கிறார். இருவருக்குமே திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால், ஹீரோ தன்னுடைய சொந்த ஊரான புதுக்கோட்டையில் சொந்த பந்தங்கள் முன்பு திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனால் திருமண ஏற்பாடுகள் எல்லாமே புதுக்கோட்டையில் நடக்கிறது.

- Advertisement -

திருமணத்திற்கு முன்பு நலங்கு வைத்த பின்பு மாப்பிள்ளை எங்குமே செல்லக்கூடாது என்று உறவினர்கள் சொன்னார்கள். ஆனால், அதையும் மீறி தன்னுடைய வருங்கால மனைவியை பார்க்க கார் எடுத்துக்கொண்டு ஹீரோ செல்கிறார். அப்போது செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக நிறை மாத கர்ப்பிணியாக வரும் ஐஸ்வர்யா தத்தாம் மீது ஹீரோ மோதி விடுகிறார். இதனால் ஹீரோ அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அதற்குப் பிறகு ஐஸ்வர்யா தத்தா நிலைமை என்ன? இந்த விபத்திற்கு பின்னால் நடக்கும் குழப்பங்கள் என்ன? ஹீரோ ஹீரோயினிக்கு திருமணம் நடந்ததா? என்பது தான் படத்தின் மீதி கதை.

மலையாள நடிகரான ஷேன் நிகம் இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே ஆக்சன், செண்டிமெண்ட் என்று ஸ்கோர் செய்து இருக்கிறார். ஆனால், வசன உச்சரிப்பில் தான் அவர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். இவரை அடுத்து கதாநாயகி நிஹாரிகா நடிப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால், இவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். இவர்களை அடுத்து படத்தில் வில்லனாக கலையரசன் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவருடைய மனைவியாக தான் ஐஸ்வர்யா தாத்தா வருகிறார். சில காட்சிகளில் வந்தாலும் இவர் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. ஆனால், பாடல்கள்தான் பெரிதாக கவரவில்லை.

ஒளிப்பதிவு, எடிட்டிங் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, படத்தில் ஆக்சன் காட்சிகளை எல்லாம் மிரட்டலாக இயக்குனர் காண்பித்திருக்கிறார். திரில்லர் ஆக்சன் ஜானரில் இயக்குனர் படத்தைக் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. அதோடு திரைக்கதை, நடிகர்கள் தேர்வு ஆகியவற்றிலும் இயக்குனர் ஸ்கோர் செய்திருக்கிறார். மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறார் என்று சொல்லலாம். ஒருமுறை சென்று படம் பார்க்கலாம்.

நிறை:

நடிகர்களின் நடிப்பு

திரைக்கதை

ஆக்சன் காட்சிகள்

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்

குறை:

ஆங்காங்கே சிலர் லாஜிக் குறைபாடுகள்

பாடல்கள் பெரிதாக கவரவில்லை

சில கதாபாத்திரங்களை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

மொத்தத்தில் மெட்ராஸ்காரன்- முயற்சி

Advertisement