விநாயகரை பெண்ணுடன் ஒப்பிடுவாயா – விஜய் படத்தை பார்க்க வேண்டாம் என்று மதுரை ஆதீனம் ஆவேசம். வீடியோ இதோ.

0
398
vijay
- Advertisement -

விஜய் திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என்று பிரபல சாமியார் பேசியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

இதையும் பாருங்க : 17 வயதில் கர்ப்பமாக இருக்கும் ரோலில் அனிகா – உடன் இருக்கும் 40 பிளஸ் நடிகைகள். வெளியான போஸ்டர்.

- Advertisement -

தளபதி 66 படம் :

இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜா நடைபெற்றது. இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.

தளபதி 66 படம் குறித்த தகவல்:

இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்தபடத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விஜய் அவர்கள் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

மதுரையில் நடந்த இந்து மாநாடு:

அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் விஜய்யின் திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என்று பிரபல சாமியார் பேசியிருக்கும் பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால், மதுரை பழங்காநத்தம் பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்று இருந்தது. இந்த மாநாட்டில் மதுரை ஆதினம் கலந்து கொண்டு ஆவேசமாக பேசி இருந்தார். அதில் அவர், தமிழகத்தில் தற்போது கோவில்களின் நிலை, அறநிலை துறையின் செயல்பாடு, திராவிட மாடல் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

விஜய் குறித்து பேசிய சாமியார்:

இதனை அடுத்து அவர், இந்துக்களை அவமதிக்கும் வகையிலான வசனங்களை திரைப்படங்களில் பேசி வரும் நடிகர் விஜய் திரைப்படங்களை பார்க்காதீர்கள் என்று கூறியதன் மூலம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் தனது திரைப்படங்களில் எந்த மதத்தையும் இழிவுபடுத்தி வசனம் பேசியது இல்லை. இருந்தாலும் மதுரை ஆதீனத்தின் இந்த பேச்சுக்கு விஜய் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement