17 வயதில் கர்ப்பமாக இருக்கும் ரோலில் அனிகா – உடன் இருக்கும் 40 பிளஸ் நடிகைகள். வெளியான போஸ்டர்.

0
409
anikha
- Advertisement -

சேவியர் பிரிட்டோவின் அடுத்த படம் குறித்த போஸ்டர் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் விஜய். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்த படம் மாஸ்டர்.இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-
Master Producer Xavier Caught In IT Raid | விஜய் மாமா சேவியர்

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்து சாதனை செய்திருந்தது. அதோடு இந்த படத்தின் மூலம் தான் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த படம் மட்டுமில்லாமல் இவர் பல படங்களை தயாரித்தும், நிறைய பிசினஸ் செய்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

சேவியர் பிரிட்டோவின் அடுத்த படம்:

இவர் விஜய்யின் மாமா(உறவினர்) என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கான போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறார். நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து இருந்த பென்சில் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணிநாகராஜ் தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார்.

வாசுவின் கர்ப்பிணிகள் படம்:

அவின் மோகன் சித்தாரா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பிகே வர்மா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் விசுவாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதை ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளது போல் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

போஸ்டரில் இருப்பது:

அதுமட்டுமில்லாமல் அந்த போஸ்டரில் விஜய் டிவியின் புகழ் நீயா நானா கோபிநாத்தும் இருக்கிறார். இவர் மருத்துவராக இந்த படத்தில் நடித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபலமான நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த போஸ்டரில் ‘விரைவில் டெலிவரி’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

வைரலாகும் போஸ்டர்:

இதன் மூலம் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் படத்தில் வனிதா விஜயகுமார் கர்ப்பமா? அஜித் மகள் அனிகா சுரேந்திரன் கர்ப்பிணியாக நடித்து இருக்கிறாரா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியும், படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Advertisement