மதுரை நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து ஜெயிலர் படத்திற்கு இலவசமாக டிக்கெட் அளித்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
கடைசியாக ரஜினி நடித்த படம் அண்ணாத்த. அண்ணன்-தங்கை பாச கதையை மையாக கொண்ட படம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இதை அடுத்து ரஜினி தற்போது “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது.
ஜெயிலர் படம்:
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.
படத்தின் பாடல்கள்:
இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதிலும் இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. இதனை அடுத்து சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஜெயிலர் படம் இலவச டிக்கெட்:
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சோசியல் மீடியாவில் விஜய் குறித்து பரவிய வதந்திக்கும், குட்டி ஸ்டோரி குறித்தும் மாஸாக பேசியிருந்தார். மேலும், சில தினங்களுக்கு முன் தான் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தின் ரிலீசுக்காக மக்கள் ஆவலாக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த Uno Aqua Care என்ற நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை அளித்து ஜெயிலர் படத்திற்கு இலவசமாக டிக்கெட்டும் வழங்கி இருக்கிறார்கள்.
Uno Aqua Care அறிக்கை:
மேலும், இது குறித்து அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில், எங்களது ஊழியர்களுக்கு இலவச ஜெயிலர் டிக்கெட் வழங்கப்படும். எங்கள் தாத்தா, அப்பா, எங்கள் தலைமுறை, எங்கள் மகன், பேரன் என்று எல்லோருக்குமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இந்த விடுமுறை எங்களுடைய அனைத்து கிளைகளுக்கும் உட்படும். வாழ்க ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த நிறுவனத்தின் செயல் சோசியல் மீடியாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகிறது.