கார்த்திக் படத்தில் இடம் பெற்ற 150 வருடங்கள் பழமையான கோனார் சந்தான கடை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்திருந்த படம் பொன்னியின் செல்வன் 2 . இந்த படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வந்தியதேவன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கார்த்தி ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தி திரை உலகில் முதன் முதலாக ஹீரோவாக நடித்த பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற கோனார் சந்தன கடை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மதுரை மாநகரத்தை பழமையான நகரம் என்று சொல்வார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. காரணம், மதுரையில் பழமையான கடைகளும் இடங்களும் தற்போது வரை இருக்கின்றது.
அந்த வகையில் மிகவும் பிரபலமான பழமையான கடைகளில் ஒன்று தான் கோனார் சந்தன கடை. இந்த கடை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இருக்கிறது. இந்த கடையானது 5 தலைமுறைகளாக அதாவது 150 வருடங்களுக்கு மேலாக இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த கடை முதன்முதலாக மீனாட்சி அம்மன் கோவில் பக்கத்தில் இந்தியன் பேங்க் அருகில் இருந்தது. அதற்கு பின்பு தான் இந்த இடம் மாற்றப்பட்டது. மேலும், மாலை கோனார் வாசனை திரவியம் சாலை என்று இந்த பகுதியில் உள்ள சாலைக்கு பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப்பின் காலப்போக்கில் அந்த பெயர் மாறிவிட்டது. மேலும், சாமிக்கு தேவைப்படும் பொருள்கள் ஆன சந்தனம், குங்குமம், பன்னீர் போன்ற பொருட்கள் எல்லாம் இந்த கடையில் விற்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து அத்தர் கொண்டுவரப்பட்டு அதிகமாக இந்த கடையில் விற்பனை ஆகிறது. அந்த காலத்திலேயே இந்த கடைக்கு பிரான்சில் உள்ள நெப்போலியன் பரிசும் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் பூஜைக்கு தேவைப்படும் குங்குமம், பன்னீர் போன்ற பொருள்களும் நல்ல தரமான முறையில் இந்த கடையில் வாங்கி விற்பனை செய்து வருகின்றது. இந்த கடையினுடைய முக்கிய ஸ்பெஷல் என்னவென்றால் சந்தனத்தில் கலக்கும் மூன்று வகையான வாசனை திரவியம் தான். இந்த கடையில் விற்கும் சந்தனத்திற்கு என்றே ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்த சந்தனத்தை வாங்குவதற்கு என்று ஒரு மக்கள் கூட்டமும் இருக்கின்றது. மதுரை மக்கள் பெரும்பாலும் நல்ல விஷயத்தில் தொடங்கி கோயில் திருவிழாக்கள், பண்டிகை, வீட்டில் விசேஷம், சித்திரை திருவிழா கொண்டாட்டம் என அனைத்துமே இந்த கடையில் வந்து தான் சந்தனத்தை வாங்குவார்கள்.
ஏனென்றால், இந்த சந்தனத்தை பயன்படுத்தினால் நல்லதே நடக்கும் என்று மக்களுடைய நம்பிக்கை. மதுரையில் பேமஸான மற்றும் பழமையான கோவில்களான மீனாட்சி அம்மன் கோயில், மதுரை தல்லாகுளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், அழகர்கோயில் போன்ற பல்வேறு கோவில்களுக்கு இவர்கள் தயாரிக்கும் சந்தனம் தான் அபிஷேகம் மற்றும் பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த கடையினுடைய மாலை கோனார் சந்தன கடை என்ற பெயர் பல்வேறு சினிமா படங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் வந்தானம்மா வந்தனம் வந்த ஜனம் எல்லாம் குந்தனம் வரும்பொழுது வாங்கி வந்தேன் மாலை கோனார் சந்தனம் என்று பாடலில் வரும். அதே போல் காதல், ஜிகர்தண்டா மற்றும் அந்த காலத்து சுவாமி வர்ணிப்பு பாடல்களிலும் இந்த கடையின் பெயர் இடம் பெற்று இருக்கும். சினிமா படங்களிலும் இந்த கடை பெயர் இடம் பெற்றிருக்கும். இவ்வளவு சிறப்புகளை கொண்ட இந்த கடை தற்போது வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த காலத்தில் எப்படி இருந்ததோ அதே பழமை மாறாமல் இன்னும் இந்த கடை இருக்கிறது