எனக்கு இந்த மாதிரி ரோல் கூட ஓகே.! எனக்கு உதவி செய்யுங்க.! வீடியோவை வெளியிட்ட நடிகை.!

0
3891
Tejashree
- Advertisement -

தமிழில் கடந்த 2003ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஒற்றன் திரைப்படத்தில் ‘சின்ன வீடா வரட்டுமா’ என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை தேஜாஸ்ரீ. மும்பையைச் சேர்ந்த இவர், முதன் முதலில் இந்தியில் தான் அறிமுகமானார். அதன் பின்னர் ஹோட்டல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-
Related image

ஒற்றன் படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் குத்து பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடி வந்த இவர் விஜய் நடிப்பில் வெளியான மதுர படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஜெயஸ்ரீ 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் என்னவானர் என்று தெரியவில்லை. இந்த நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த வீடியோவில், என்னுடைய அம்மாவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக அவரை கூடவே இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் இதனால் கடந்த சில வருடங்களாக என்னால் திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை. அம்மாவை கவனித்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையை கவனித்துக் கொள்ள முடியலால் போய் விட்டது.

Image result for tejashree tamil actress

ஆனால், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு சிறிய ரோலாக இருந்தாலும் பரவாயில்லை சிறந்த ரோலாக இருந்தால் மட்டும் போதும். திரைப்படங்கள் மட்டும் இல்லை எனக்கு வெப் தொடர்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாலும் சரி தான் என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement