ஊர் நாட்டாமை தான், ஆனாலும் இதுக்கு மட்டும் பஞ்சாயத்து பண்ணவே மாட்டார் – தந்தை நினைவு நாளில் மதுரை முத்து உருக்கம்.

0
399
- Advertisement -

சின்னத்திரையில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் மதுரை முத்து, தனது தந்தையின் நினைவு நாள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அரசம்பட்டி என்ற ஊரில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே மேடைப் பேச்சாளராக இருந்திருக்கிறார். அதோடு,பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்தவராம்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் சிரிப்புயாளராக அறிமுகமான மதுரை முத்து பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி வந்தார். கலக்க போவது யாரு, அசத போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மதுரை முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

- Advertisement -

தந்தையின் நினைவு நாள் குறித்து:

சமீபத்தில் மதுரை முத்து, தனது அப்பாவின் நான்காவது ஆண்டு நினைவு நாள் அன்று ‘நாட்டாமை’ ராமசாமி என போஸ்டர் அடித்து மதுரை திருமங்கலம் சுற்றுவட்டாரத்தில் ஒட்டி அசத்தியுள்ளார். மேலும்,’அட, நாட்டாமை மகனா நீங்க, சொல்லவே இல்ல’ என கேட்கும் அளவுக்கு அவரது ஊர் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து கிராம மக்களுக்கும் தன்னால் முடிந்த சில உதவிகளைச் செய்திருக்கிறார்.

மதுரை முத்துவின் தந்தை குறித்து:

தனது தந்தையை பற்றி மதுரை முத்து கூறுகையில், “பிரிட்டிஷ்காரங்க காலத்தில் கிராமங்களை நிர்வாகிக்க முன்சீஃப், கர்ணம்னு நியமிச்சவங்களின் முத்துவின் தாத்தாவை தொடர்ந்து அவரது தந்தை பணியாற்றினராம். அந்த காலகட்டத்தில் அந்தப் பணி நாட்டாமை பதவி போன்றது என்றும் அவரது ஊரான அரசம்பட்டி மட்டுமில்லாமல், அதை சுற்றி இருக்கிற 12 கிராமங்களும் அவரது அப்பா பேச்சை தட்டாது என்றும் பெருமையுடன் கூறியுள்ளார். மேலும் அந்த காலத்திலேயே கொஞ்சம் படித்தவர் என்றும் ஆளுமை திறன் மிக்கவராக இருந்ததால் ஊரை கட்டுக்கோப்பாக வச்சிருந்தார் என் அப்பா என்று முத்து கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மதுரை முத்துவின் அப்பா செய்த நாட்டாமை பணிகள்:

அதனைத் தொடர்ந்து, தனது ஊரில் அடுத்தவன் காட்டுல ஆடு மாட்டை விட்டு மேய விடுவது, கடலைக் களவாடுவது போன்ற பஞ்சாயத்துக்கள் எல்லாம் அவரின் அப்பா கிட்ட தான் வரும் என்றும் தனது அப்பா என்ன தீர்ப்பு சொன்னாலும் அதை இரண்டு தரப்பும் கேட்டுக் கொண்டு சமாதானம் ஆகி போயிடுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அவருடைய அப்பா இப்படி எல்லாம் பஞ்சாயத்துகளையும் தீர்த்து வைத்தாலும் கணவன்,மனைவி இடையிலான பிரச்சனை வந்தா மட்டும் நாளைக்கு பஞ்சாயத்தில் பேசிக்கலாம் என்று கூறி வெளியூர் கிளம்பி போய்டுவாராம். அப்படி தனது அப்பா கிளம்பிப் போய் ரெண்டு,மூணு நாள் கழிச்சு வருவதற்குள் அந்த தம்பதியினர் கோபம் குறைந்து சமாதானம் ஆகி போயிடுவார்களாம் என்று பூரிப்போடு கூறியுள்ளார்.

காமெடியன் ஆனது அப்பாவுக்கு பிடிக்கவில்லை:

அதேபோல் தான் ஒரு வாத்தியார் அல்லது வி.ஏ.ஓ வேலைக்குதான் போகணும் என அவரது தந்தை ஆசைப்பட்டார் என்றும் டிவி, காமெடின்னு வந்ததெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லை அதை கூத்தாடி வேலைன்னு திட்டுவார் என கூறியுள்ளார். ஆனால் கடைசியில் ஒருமுறை ஊர் பிரச்சனைக்காக மதுரை கலெக்டர் ஆபீசுக்கு அவருடைய அப்பா போகும்போது, ‘இவர் மதுரை முத்து அப்பா’ என்று தன் தந்தையை கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்களாம். உடனே கலெக்டரும் அவருடைய அப்பாவிடம் ‘நான் உங்க பையன் நிகழ்ச்சி எல்லாம் விடாமல் பார்ப்பேன்’ என்று சொன்ன பிறகு தான் நான் ஏதோ உருப்படியா வாழ்றேன்னு என் அப்பா நம்ப தொடங்கினார் என்றார்.

முத்துவின் அப்பாவிற்கு எம்.ஜி.ஆர் பிடிக்காதாம்:

தொடர்ந்து அவரின் தந்தை பற்றி மதுரை முத்து கூறுகையில், தனது அப்பாவிற்கு சினிமா பார்க்கிற பழக்கம் கிடையாது என்றும் அவர் பார்த்த இரண்டே படம் கரகாட்டக்காரன் மற்றும் நாட்டாமை என்று கூறியுள்ளார். மேலும் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் கிராம அதிகாரி பதவிகள் பதிலாக வி.ஏ.ஓ பதவி கொண்டு வந்ததால் தனது அப்பாவிற்கு எம்.ஜி.ஆர் பிடிக்காது என்றும் அவருடைய படங்களை வீட்டுக் கதவுல ஒட்டி வச்சிருந்தால் தன்னுடைய அம்மா கிட்ட அதை கிழிச்சு போட சொல்லுவார் என்று தன் தந்தையை பற்றி பகிர்ந்தார்.

மேலும் அவர் கூறுகையில் அவருடைய அப்பா பெருசா சொத்து எதுவும் சேர்த்து வைக்கலன்னாலும் தன்னுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஒழுக்கமாகவும் ,நேர்மையாகவும் வாழ்ந்தாராம். இப்போது தான் பேர் ,புகழ் பணம்னு இருக்குறதுக்கு காரணம் தன்னுடைய திறமை மட்டும் இல்லை என்றும் தன்னுடைய அப்பா அம்மா செஞ்ச புண்ணியங்கள் நல்ல காரியங்களுக்கும் அதில் பெரிய பங்கு இருக்குன்னு நெகிழ்ச்சியுடன் கூறிய மதுரை முத்து இப்போது புதுசா ஆரம்பிச்சி இருக்கிற ‘முதல் வணக்கம்’ நிகழ்ச்சியிலும் வெளிநாடுகளில் திருவிழா காலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பிஸியாக உள்ளார்.

Advertisement