தன்னுடைய பெற்றோர் மற்றும் மனைவிக்காக மதுரை முத்து செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் மதுரை முத்து. இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அரசம்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருந்தே சிறந்த பேச்சாளராக இருந்து இருக்கிறார். பின் இவர் பல மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதோடு பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார். அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மதுரை முத்து சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நிகழ்ச்சிகளில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி வந்தார். கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மதுரை முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
மதுரை முத்து குறித்த தகவல்:
இந்த பிரபலத்தின் மூலம் இவர் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். இருந்தும் சினிமாவில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் மீண்டும் முத்து சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி குத் வித் கோமாளி முதல் சீசனில் மதுரை முத்து நகைச்சுவை கோமாளியாக வந்திருந்தாலும் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து இருந்தார்.
மதுரை முத்து குடும்பம்:
அதன் பின் இவர் கெஸ்ட் ரோலில் கலக்கி கொண்டு இருக்கிறார். இதனிடையே மதுரை முத்து அவர்கள் லேகா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவருடைய மனைவி லேகா 2016ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு 32 வயது தான் ஆனது. பின் மதுரை முத்து சில மாதங்கள் கழித்து தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இதற்கு பலரும் விமர்சித்து இருந்தார்கள்.
மதுரை முத்து கட்டிய கோவில்:
தற்போது மதுரை முத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கெஸ்ட் ரோலில் கலந்து கொள்கிறார். சொல்ல போனால் விஜய் டிவியின் ப்ராடக்ட் ஆகவே மதுரை முத்து மாறி விட்டார். இப்படி இருக்கும் நிலையில் மதுரை முத்து செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, மதுரை முத்து அவர்கள் இறந்து போன தன்னுடைய தந்தை ராமசாமி மற்றும் தாய் இருளாயிக்கு மற்றும் முதல் மனைவி லேகாவிற்கு திருமங்கலம் அருகே அரசப்பட்டி கிராமத்தில் தான் கோயில் கட்டி இருக்கிறார்.
கோயில் கட்டிய முத்து:
இந்த கோயில் சித்திரை முதல் தமிழ் புத்தாண்டு தினத்தில் திறந்து வைத்திருக்கிறார். வழக்கம்போல யாகங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நகைச்சுவை பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். மேலும், இந்த விழாவை ஒட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம், கைம்பெண் மற்றும் முதியோருக்கு வேட்டி, சேலை, மாணவர்களுக்கு உடைகள், நோட்டு புத்தகம், மரங்கன்றுகள் ஆகியவற்றையெல்லாம் மதுரை முத்து வழங்கி இருக்கிறார்.