வடக்கர்கள் இங்க வந்து உழைக்கட்டும்,ஆனா – விஜய் ஆண்டனி பதிவிற்கு மதுரை முத்துவின் நச் பதில்.

0
957
madurai
- Advertisement -

தமிழ் நாட்டில் நிலவி வரும் வட மாநிலத்தவரின் ஆக்கிரமிப்பு அதிகமாகியுள்ளதை சமூக ஆர்வலர்கள் முதல் அரசியல் வாதிகள் வரையில் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே போல பரிதாபங்கள் போன்ற பல யூடியூப் சேனல்களும், தொகுப்பாளர்களும் வட மாநிலத்தவரின் வருகை தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பதை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் விஜய் ஆண்டனியும் இது தொடர்பாக தற்போது ஒரு பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அந்த பதிவில் “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பதிவிட்டுருந்தார். இந்த பதிவு வைரலான நிலையில் இதற்கு வரவேற்பு வந்தாலும் மறுபக்கம் கடுமையான எதிர்ப்புகள் நெட்டிசன்கள் தரப்பில் இருந்து வந்துகொண்டிருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் ஆண்டனியின் இந்த கருத்தை பகிர்ந்துள்ள மதுரை முத்து ‘பிறகு ஏன் விஜய் படத்தை வெளியிடக் கூடாது என்று சொன்னார்கள்?உழைக்கட்டும் ஆனால் ஆள நினைக்க கூடாது’ என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பூரில் வட மாநில நபர்கள் தமிழர்களை தாக்கிய வீடியோ ஒன்று சமுக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருந்தது.

இந்த விவகாரம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மாதுரை முத்து இந்த சம்பவத்தை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ‘திருப்பூர் மாவட்டத்தில் வாடா மாநில இளைஞர்கள் 100 பேர் பெல்ட், கத்தி, மரக்கட்டை போன்றவற்றை வைத்துக்கொண்டு நம்முடைய தமிழ் இளைஞர்கள் விரட்டி அடிக்கும் கட்சியை பார்த்தேன். தொடக்கத்தில் சிறிய வேலை கேட்டு வந்தார்கள். பின்னர் 10 சதவிகிதம் இருந்தார்கள்.தற்போது திருப்பூரில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தற்போது 65 சதவிகிதமாக உள்ளனர்.

-விளம்பரம்-

அணைத்து வேலையையும் இழந்து விட்டு ஊருக்கு வந்துவிட்டோம்.இப்போது குடி புகுந்த மக்கள் தமிழ் மக்களை விராட்டி அடிக்கும் அளவிற்கு இளைஞர்கள் அதுவும் தமிழ் இளைஞர்கள் அந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். பாலாபிஷேகம் என இந்த வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வட மாநிலத்தவர்கள் இன்னும் சில நாட்களில் நமக்கு பால் ஊத்திட்டு போக போகிறான். வேலை வாய்ப்பே இல்லாமல் இப்படியே சென்றால் பிட்சை எடுக்கும் கால காலகட்டத்திற்கு தமிழ் இளைஞர்கள் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

ஏனெற்றால் சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் பார்த்தேன், செட்டியார் தெரு, நாடார் தெரு, கவுண்டர் தெரு, தேவர் என இருதீர்கள் இனி வரும் காலகட்டங்களில் வடக்கன் தெரு என்று தான் வரப்போகிறது. வட மாநிலத்தவர்கள் இங்கே ரேஷன் கார்டு வாங்கி விட்டான். இதனை லேசான வீடியோ பதிவாக எண்ணவேண்டாம். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நானும் பல ஹோட்டல்களில் தங்குகிறேன் நான் பர்த்தில் அதிகபட்சம் வட இந்தியர்களாக இறுகின்ற்றனர்.

நம்முடைய தமிழர்கள் நிலை எந்த அளவிற்கு என்று தெரியவில்லை. ஏனெற்றால் இன்ஜினியரிங் படித்துவிட்டு வீட்டுக்கு ஒருவர் இருக்கின்றார் ஆனால் வேலை கிடையாது. இதனை மிகவும் லேசாக நினைக்க வேண்டாம் வட மாநிலத்தவர்கள் விரட்டி அடிக்கும் காட்சியை பார்க்கும் போது அவ்வளவு சங்கடமாக இருந்தது. வட இந்தியில் ஒரு இடத்தில ஹிந்தி தெரியாமல் இரண்டு நாட்கள் தங்க முடியவில்லை. ஆனால் இங்கே அவர்களே நம்மை வெரைட்டி அடிக்கும் அளவிற்கு அசால்டாக இருக்கறோம். தமிழ் இளைஞர்கள் தயவு கூர்ந்து கவனத்தோடு விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது என்பதை தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் மதுரை முத்து.

Advertisement