எல்லாரோட ஆர்மியும் எனக்கு ரசிகர்கள்.! கெத்து காட்டிய சேரன்.!

0
3468
Cheran
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில்கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற்றது . மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் நாமினேஷனில் இடம்பெற மாட்டார். எனவே மீதமுள்ள ஆறு பேரில் யார் நாமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த வாரத்தின் நாமினேஷன் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் துவங்கப்பட்டது.

மேலும், தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் சேரன் தனது பெயரை முதல் இடத்தில் வைக்க சில காரணத்தை கூறினார். அப்போது மற்ற போட்டியாளர்களின் அர்மியெல்லாம் என்னுடைய ரசிகர்கள் தான் என்று கூறியுள்ளார் சேரன்.

-விளம்பரம்-

Advertisement