ஒரு மகளுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருப்பது என்பது – தன் மனைவியை நினைத்து கலங்கிய மதுரை முத்து

0
1583
- Advertisement -

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் மதுரை முத்து எமோஷனலாக பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் சூப்பர் டாடி நிகழ்ச்சியும் ஒன்று. வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது குழந்தைகளுடன் பெற்றோர்கள் கலகலப்பாக விளையாடும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ராமர், முத்து, கிங் காங், வேல்முருகன், வினோத் உட்பட பல பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளுடன் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட சவால்களை அப்பாக்கள், பிள்ளைகளும் செய்யும் சேட்டைகள் பெரிய லெவலில் உள்ளது. இதில் ஒவ்வொரு வாரமும் நன்றாக விளையாடத நபரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவது வழக்கம் தான். இப்படி பல திருப்பங்களுடன் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மதுரை முத்து கண்கலங்கி கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

- Advertisement -

வைரலாகும் சூப்பர் டாடி நிகழ்ச்சி:

இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் மதுரை முத்து தனது குடும்பத்தில் நடந்த சோகமான விஷயத்தை கூறி கண்ணீர் விட்டு அழுகிறார். மேலும், அவருடைய மனைவி இறந்த பிறகு குழந்தைகளை வைத்துக் கொண்டு பயங்கரமாக கஷ்டப்பட்டது குறித்து மதுரை முத்து கண்ணீர் மல்க கூறி இருக்கிறார். இப்படி அவர் பேசி இருக்கும் போது டாடி சூப்பர் நிகழ்ச்சி அரங்கமே சோகத்தில் மூழ்கியது. அதுமட்டுமில்லாமல் தற்போது இவரின் பேச்சு சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் கண்கலங்கினார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய முதல் மனைவி இறந்த பிறகு ஏற்பட்ட இழப்புகளை கூறி இருக்கிறார்.

மதுரை முத்து மீடியாவுக்குள் நுழைந்தது:

சின்னத்திரையில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் மதுரை முத்து. இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அரசம்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருந்தே மேடைப் பேச்சாளராக இருந்து இருக்கிறார். பின் இவர் பல மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார். அதன் பின் தொலைக்காட்சி சிரிப்புயாளராக மதுரை முத்து சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

-விளம்பரம்-

மதுரை முத்து சின்னத்திரை பயணம்:

இந்த பிரபலத்தின் மூலம் இவர் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். இருந்தும் சினிமாவில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் மதுரை முத்து சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். மதுரை முத்து அவர்கள் லேகா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவருடைய மனைவி லேகா 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லேகா விபத்தில் உயிரிழந்தார்.அப்போது அவருக்கு 32 வயது தான் ஆனது. பின் மதுரை முத்து சில மாதங்கள் கழித்து தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை முத்து முறையாக திருமணம் செய்து கொண்டார். இதற்கு பலரும் விமர்சித்து இருந்தார்கள். ஆனால், மதுரை முத்து தன் இரண்டு மகள்களுக்காக தான் திருமணம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

Advertisement