நீங்க கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செஞ்சுட்டு இருங்க நமக்கு வடக்கன் பால் ஊத்திட்டு போக போறான் – மதுரை முத்து ஆதங்கம்.

0
662
- Advertisement -

சின்னத்திரையில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் மதுரை முத்து. இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அரசம்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருந்தே மேடைப் பேச்சாளராக இருந்து இருக்கிறார். பின் இவர் பல மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார். அதன்பின் தொலைக்காட்சி சிரிப்புயாளராக மதுரை முத்து சின்னத் திரைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி வந்தார். கலக்க போவது யாரு, அசத போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மதுரை முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்படி பட்ட நிலையில் தான் தற்போது வீடியோ ஒன்றை வெளிட்டு தமிழ் இளைஞர்களை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளார்

- Advertisement -

திருப்பூர் வட மாநிலத்தவர்கள் :

அந்த வீடியோவில் “திருப்பூர் மாவட்டத்தில் வாடா மாநில இளைஞர்கள் 100 பேர் பெல்ட், கத்தி, மரக்கட்டை போன்றவற்றை வைத்துக்கொண்டு நம்முடைய தமிழ் இளைஞர்கள் விரட்டி அடிக்கும் கட்சியை பார்த்தேன். தொடக்கத்தில் சிறிய வேலை கேட்டு வந்தார்கள். பின்னர் 10 சதவிகிதம் இருந்தார்கள்.தற்போது திருப்பூரில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தற்போது 65 சதவிகிதமாக உள்ளனர். அணைத்து வேலையையும் இழந்து விட்டு ஊருக்கு வந்துவிட்டோம்.

பால் ஊத்திட்டு போக போறான் :

இப்போது குடி புகுந்த மக்கள் தமிழ் மக்களை விராட்டி அடிக்கும் அளவிற்கு இளைஞர்கள் அதுவும் தமிழ் இளைஞர்கள் அந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். பாலாபிஷேகம் என இந்த வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வட மாநிலத்தவர்கள் இன்னும் சில நாட்களில் நமக்கு பால் ஊத்திட்டு போக போகிறான். வேலை வாய்ப்பே இல்லாமல் இப்படியே சென்றால் பிட்சை எடுக்கும் கால காலகட்டத்திற்கு தமிழ் இளைஞர்கள் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

-விளம்பரம்-

எல்லா இடங்களிலும் வட மாநிலத்தவர்கள் :

ஏனெற்றால் சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் பார்த்தேன், செட்டியார் தெரு, நாடார் தெரு, கவுண்டர் தெரு, தேவர் என இருதீர்கள் இனி வரும் காலகட்டங்களில் வடக்கன் தெரு என்று தான் வரப்போகிறது. வட மாநிலத்தவர்கள் இங்கே ரேஷன் கார்டு வாங்கி விட்டான். இதனை லேசான வீடியோ பதிவாக எண்ணவேண்டாம். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நானும் பல ஹோட்டல்களில் தங்குகிறேன் நான் பர்த்தில் அதிகபட்சம் வட இந்தியர்களாக இறுகின்ற்றனர்.

அடித்து விரட்டும் அளவிற்கு வந்து விட்டது :

நம்முடைய தமிழர்கள் நிலை எந்த அளவிற்கு என்று தெரியவில்லை. ஏனெற்றால் இன்ஜினியரிங் படித்துவிட்டு வீட்டுக்கு ஒருவர் இருக்கின்றார் ஆனால் வேலை கிடையாது. இதனை மிகவும் லேசாக நினைக்க வேண்டாம் வட மாநிலத்தவர்கள் விரட்டி அடிக்கும் காட்சியை பார்க்கும் போது அவ்வளவு சங்கடமாக இருந்தது. வட இந்தியில் ஒரு இடத்தில ஹிந்தி தெரியாமல் இரண்டு நாட்கள் தங்க முடியவில்லை. ஆனால் இங்கே அவர்களே நம்மை வெரைட்டி அடிக்கும் அளவிற்கு அசால்டாக இருக்கறோம். தமிழ் இளைஞர்கள் தயவு கூர்ந்து கவனத்தோடு விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது என்பதை தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் மதுரை முத்து.

https://youtu.be/xSBxUz6U-Oc

விழித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே :

இது குறித்து போலீசில் விசாரித்ததில் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் தனியார் பனியன் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கே இருக்கும் ஒரு கடாயில் சிகரெட் பிடிக்கும் போது அங்கு தமிழருக்கு வட மாநிலத்தவர்க்கும் சண்டை வந்துள்ளது. இதனையடுத்து தன்னுடைய சக மாநில நண்பர்களை அழைத்து வந்து அந்த தமிழரை விரட்டி விரட்டி அடித்துள்ளார். இது 14ஆம் தேதி நடந்ததை தொடர்ந்து இந்த வீடியோ பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement