தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக கலக்கி கொண்டு இருக்கும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் ‘மாஃபியா’ படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடித்து உள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரசன்னா அருண் விஜய்க்கு வில்லனாக டிகே என்ற ரோலில் நடித்து உள்ளார். ஏற்கனவே துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் அருண் விஜய் அவர்கள் கார்த்திக் நரேன் உடன் கைகோத்து இருந்தார்கள். தற்போது இந்த படத்திலும் இவர்கள் இணைந்து உள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இவர்கள் இருவர் கூட்டணி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்:
அருண் விஜய் அவர்கள் போதை மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரியாக பணிபுரிகிறார். அவருடைய குழுவில் பிரியா பவானி சங்கர் மற்றும் ஒரு இளைஞர் இருக்கிறார்கள். சென்னையில் முக்கியமான இடங்களில் போதை மருந்துகளை ஒரு கும்பல் விற்கிறார்கள். குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதை மருந்து விற்கப்படுகிறது. இதை அருண் விஜய் அவர்கள் எப்படியோ கண்டுபிடித்து விடுகிறார். இதற்கு முன்பே இதெல்லாம் செய்வது பிரசன்னா என்பது இரண்டு பேருக்கு மட்டும் தெரிய வருகிறது. அவர்களை பிரசன்னா கொன்று விடுகிறார். இருந்த போதும் அருண் விஜய் அவர்கள் எப்படியே இந்த போதை பொருள் கும்பலை கண்டுபிடித்து விடுகிறார்.
போதை பொருள் கும்பல் தலைவனை அருண் விஜயை தேடி வர வைக்கலாம் என்று முடிவு செய்கிறார். ஆனால், அதற்கு முன்பே பிரசன்னா, அருண் விஜய் குடும்பத்தை தூக்குகிறார். பின் அருண் விஜய், பிரசன்னாவை தேடி செல்கிறார். அதன் பின் அருண் விஜய்யும் பிரசன்னாவும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்களா?? அருண் விஜய் பிரசன்னாவை கைது செய்கிறாரா??? போதைப் பொருள் கும்பலை ஒழிக்கிறாரா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
அருண் விஜய் இந்த படத்தில் செம்ம மாஸாக நடித்து உள்ளார். என்னை அறிந்தால் படத்தில் இருந்து தற்போது வரை அருண் விஜய் அவர்கள் நடித்த கதாபாத்திரம் எல்லாமே வேற லெவல் தூள் கிளப்பி இருக்கிறது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், அருண் விஜய்க்கு உதவியாளராக வருகின்றார். பின் அருண் விஜய் அவரை காதலித்து அவர்களிடையே இருக்கும் ரொமண்ட்ஸ் எல்லாம் அழகாக காண்பித்து உள்ளார் இயக்குனர்.
பிரசன்னா அவர்கள் தன்னுடைய கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக நடித்து உள்ளார். படம் முழுக்க விறுவிறுப்பாக அடுத்தது என்ன என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. படத்தில் அருண்விஜய், பிரசன்னா உடைய நடிப்பு ஆடுபுலி ஆட்டம் தான். படத்தின் கிளைமாக்ஸ்ஸில் அருண்விஜய், பிரசன்னா அடித்து துவம்சம் செய்து உள்ளார்கள்.
பிளஸ்:
படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக அடுத்து என்ன என்று யோசிக்க அளவில் சென்று உள்ளது.
அதைவிட படத்தின் கிளைமாக்ஸ் தான் செம ட்விஸ்ட்.
படத்தின் டெக்னிகல் விஷயங்கள், ஒளிப்பதிவு, இசை எல்லாம் சூப்பர்.
மைனஸ்:
படத்தில் பிரசன்னா ஜாலியாக வந்து கொலை செய்து இடத்தில் லாஜிக் இடிக்கிறது.
முதல் பாதி கொஞ்சம் போரடிக்கும் வகையில் தான் உள்ளது.
இறுதி அலசல்:
போதை பொருள் விற்கும் கும்பலை அதிரடியாக அழிக்க நினைக்கிறார் அருண் விஜய். அந்த கும்பலை கடைசியில் பிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் சுவாரசியம். மொத்தத்தில் மாபியா கொஞ்சம் லாஜிக் மீறல்களுடன் கொஞ்சம் சுவாரசியமான ஆடுபுலி ஆட்டம்.