இயக்குனர் மகிழ் திருமேனியிடம் ரேசிங் செல்வதற்கு முன் அஜித் கூறி இருந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் சிங்களான ‘சவதீகா’ பாடல் வெளியாகி பயங்கர ட்ரெண்டிங் ஆனது. அறிவு எழுதி இருக்கும் இப்பாடலை பாடகர் ஆண்டனிதாசன் பாடியிருந்தார். இந்தப் பாடல் வெளிநாட்டுகளில் படமாக்கப்பட்டதாகும். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது.
மகிழ் திருமேனி பேட்டி:
தற்போது இப்படம் வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 800 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் உண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் மகிழ் திருமேனி, ரேசிங் செல்வதற்கு முன் அஜித் தன்னிடம் கூறிய சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது அஜித் மகிழ் திருமேனியிடம், நான் ரேசிங் செல்வதற்கு முன் என் பட வேலைகளை முடித்து விட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அஜித் சொன்ன வார்த்தை:
மேலும், நான் ரைசிங் செல்லும் போது எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் கார் ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் போது 100% செலுத்த வேண்டும். நான் 90% கார் ஆக்ஸிலரேட்டரை அழுத்தி விளையாட விரும்பவில்லை. அதோடு நான் ரேசிங் செல்லும் போது இந்த வேலை இருக்கு, அந்த வேலை இருக்கு என நான் யோசிக்க கூடாது என்று கூறி இருக்கிறார். மேலும், அஜித் சொன்ன இந்த வார்த்தைகளை கேட்ட உடனே தனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது என்று இயக்குனர் மகிழ் திருமேனி கூறியிருக்கிறார்.
அஜித் கார் ரேசிங்:
நடிகர் அஜித் நடிப்பை தாண்டி கார் ரேசிங் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேஸ்ங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.

’24H’ கார்பந்தயம்:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ’24H’ கார்பந்தயம் துபாயில் நடந்தது. இதில் அஜித் குமாருடைய டீமுமே களம் இறங்கியது. கடந்த ஆண்டு தான் அஜித், 'அஜித்குமார் ரேசிங் டீம் ' என்கிற குழுவை உருவாக்கினார். மேலும், அந்தக் குழுவிற்கு தேவையான அனைத்தையும் அஜித் செய்து வருகிறார். சமீபத்தில் அந்த குழுவுடன் தான் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் பங்கு பெற்றார். மேலும், 991 பிரிவில் கார் ரேஸில் அஜித்குமார் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இதற்கு அஜித்துக்கு ரசிகர்கள், வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.






