‘எல்லாம் உன்னால் தான்’ – குட் நியூஸ் சொன்ன மகாலட்சுமி ரவீந்தர். ரசிகர்கள் வாழ்த்து.

0
441
ravindar
- Advertisement -

திருமணமாகி 100 நாட்கள் முடிவடைந்ததை ஒட்டி மகாலட்சுமி-ரவீந்திரன் தம்பதி கொண்டாடி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் ஹாட் டாபிக்காக சென்று இருந்தது பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன்- நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் தான். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர்.

-விளம்பரம்-

இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது. மேலும், வனிதா – பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது பீட்டர் பவுல் முதல் மனைவிக்கு இவர் தான் உறுதுணையாக இருந்து வந்ததோடு அவரது குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்தார்.

- Advertisement -

மஹாலக்ஷ்மி குறித்த தகவல் :

தற்போது இவர் பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருந்தார். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹாலக்ஷ்மி. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் கேரியரை தொடங்கினார். பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறார். இவர் முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் தான் நடிகையாக நுழைந்தார்.

மஹாலக்ஷ்மி – ரவீந்தரன் திருமணம் :

இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் மஹாலக்ஷ்மி, ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். திருமணத்திற்கு பின் இருவரும் தங்களின்புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

100 நாள் கொண்டாட்டம்:

இந்நிலையில் தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி 100 நாட்கள் கடந்திருக்கிறது. இதை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருமே சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், போட்டோவுடன் சோசியல் மீடியாவில் ரவீந்திரன் பகிர்ந்து, 100 நாட்கள் முடிந்தது அம்மு. இந்த 100 நாள் பதிவுக்கு நல்லதொரு தலைப்பை எழுத என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். என்னால் நாடகமாக எழுத முடியவில்லை. நான் நினைப்பது எழுதுகிறேன் அம்மு.

ரவீந்திரன்-மஹாலக்ஷ்மி பதிவு:

37 வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு நொடியிலும் 100 நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். அதிக அன்பு, அக்கறை, வேடிக்கை, சண்டை என என்னை நகர்த்திக் கொண்டே இரு வாழுறேன் அம்மு சந்தோசமா உன்னால என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு மகாலட்சுமி, வாழ்வோம் அம்மு சந்தோசமா என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இவர்களின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement