விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அம்மு, நீங்கள் போன பிறகு நான் அழுது கொண்டு இருந்தேன். கிளாஸ் மிஸ் தான் என்னிடம் அன்பாக பேசி நடந்து கொண்டார் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு விஜய்க்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் காவிரி, எனக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு பெரிய வீடு, சில நபர்கள் இருந்தார்கள். அதில் ஒரு ஹீரோ இருந்தார். ஆனால், அவர்கள் யார் என்று தான் தெரியவில்லை. அடிக்கடி அந்த மாதிரி கனவு வந்து கொண்டே இருக்கிறது என்றார். இதை கேட்டு சாரதாவிற்கு ஷாக்காக இருக்கிறது.

இன்னொரு பக்கம் விஜய், குழந்தைக்கு தங்களுடைய காதல் கதையை சொல்லி தூங்க வைத்தார். மறுநாள் பள்ளிக்கு விஜய், தன் மகளை அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது காவிரியும் வந்தார். விஜய் பார்ப்பதற்குள் காவிரி உள்ளே சென்று விட்டார். பின் விஜய், உன்னுடைய கிளாஸ் டீச்சரை பிறகு சந்திக்கிறேன். பத்திரமாக போயிட்டு வா என்று விஜய் அனுப்பி வைத்தார். பின் பள்ளிக்கூடத்திற்கு வந்த அம்மு, காவிரிக்கு விஷ் செய்து இருவருமே கிளாஸ் ரூமிற்கு போனார்கள்.
மகாநதி:
சாரதா ஒரு கடையில் காய் வாங்கிக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வந்த விஜயின் சித்தப்பா அன்பரசு, சாரதாவை பார்த்து கடைக்காரர்களிடம் விசாரித்தார். அதற்குப்பின் விஜயின் வீட்டிற்கு வந்த அன்பரசு, சாரதாவை பார்த்த விஷயத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். உடனே சாக்கான தாத்தா, காவிரி குடும்பத்தை பற்றி விஜயிடம் சொல்ல வேண்டாம். இப்போதான் என் பேரனும் என் பேத்தியும் சந்தோஷமாக இருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது காவிரியை பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை என்றார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் பள்ளிக்கூடத்தில் காவிரி, அம்மு இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு சாப்பிட்டார்கள். அப்போது அம்மு, உங்களை பார்த்தால் எங்கள் அப்பா சொல்லும் கதையில் வரும் ராணியை போல நீங்கள் இருக்கிறீர்கள் என்றார். அம்மு சொல்லும் போது காவிரிக்கு தன் வாழ்க்கையில் நடந்தது போலவே தோன்றுகிறது. அதற்குப்பின் விஜய் பள்ளியில் இருந்து தன் மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். அம்மு தன்னுடைய டீச்சரை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சந்தோஷமாக சொல்லி கொண்டிருந்தார். எல்லோருக்குமே அம்முவின் டீச்சரை பார்க்க ஆர்வமாக இருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=jMhpLsq0sA4
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் அம்மு சொன்னதால் விஜய், டீச்சரை பார்க்க ஆர்வமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஸ்கூலில் ஃபேமிலி புகைப்படத்தை காவிரி வரைய சொல்கிறார். அப்போது அம்மு, தன்னுடைய அப்பா, தான் இருக்கும் புகைப்படத்தை கொடுக்கிறார். பின் காவிரி, உன் அம்மா எங்கே என்று கேட்கிறார். அதற்கு அம்மு, அம்மா சாமி கிட்ட போய்விட்டார் என்கிறார். பின் காவிரி அந்த புகைப்படத்தில் ஒரு அம்மாவை வரைகிறார். பின் தன்னுடைய அப்பாவை பார்ப்பதற்கு அம்மு கூப்பிடுகிறார். காவிரியும் அம்முவுடன் கிளம்பி போகிறார்






