விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், அந்த அப்பளம் விளம்பரம் எப்பவோ செய்தது என்று சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் விஜய் வேலை இருப்பதால் வெளியே சென்று விட்டார். காவிரி, அம்முவுடன் ஜாலியாக பேசி விளையாடிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கவனித்த விஜயின் சித்தி சந்தோஷப்பட்டார். பின் காவிரியிடம் விஜயின் சித்தி, நீ அம்முவைய நன்றாக பார்த்துக் கொள்கிறாய். உன்னுடைய மகள் போலவே நினைக்கிறாய். விஜயை திருமணம் செய்து கொள் என்றார். காவிரி அதெல்லாம் முடியாது என்றார். உடனே விஜய்யின் சித்தி, ரொம்ப கோபமாகவும் கண்டிப்பாகவும் பேசுவதால் காவிரி பேசி இருந்தார்.

இதனால் கோபப்பட்டு காவிரி அங்கிருந்து சென்று விட்டார். இதையெல்லாம் கவனித்த அம்மு, தன் தந்தை விஜய் வந்தவுடன் சொன்னார். விஜய், எதற்காக இப்படி செய்தீர்கள்? நானே பேசிக்கொள்கிறேன். தயவு செய்து அமைதியாக இருங்கள் என்றார். இன்னொரு பக்கம் நிவின், காவிரியிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டார். காவிரி, வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.
மகாநதி:
தான் ஏற்கனவே பார்த்த நபரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக காவிரி சொன்னார். இதை கேட்டு மொத்த வீடுமே சாக் ஆகிறது. அதற்குப்பின் காவிரி, தான் திருமணம் செய்து கொள்ள போகும் கார்த்திகை சந்தித்து பேசி இருந்தார். இருவருமே தங்கள் திருமணத்தைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். இதைப்பற்றி நிவின், விஜயை சந்தித்து பேசி இருந்தார். விஜய், பார்த்துக் கொள்ளலாம். காவிரி எந்த தவறான முடிவும் எடுக்க மாட்டாள் என்றார். அதற்கு பின் அம்முவிடம் விஜயின் சித்தி, காவிரி வேறொரு திருமணம் செய்து கொள்ளப் போவதை பற்றி சொன்னார். இதனால் அம்மு ரொம்பவே சோகமாக இருந்தார். பின் காவிரி எடுத்த முடிவால் சாரதா கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, நான் கார்த்திகை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அவருடைய வீட்டில் இருந்து என்னை பார்ப்பதற்கு இங்கு வருகிறார்கள் என்று சொல்கிறார். சாரதா, யாரை கேட்டு முடிவெடுத்தாய். எங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. நீ விஜய் தான் திருமணம் செய்து கொள்ளணும் என்று சொல்கிறார். இதனால் காவேரி, சாரதாவிற்கு இடையே பயங்கர கலவரம் வெடிக்கிறது. இன்னொரு பக்கம் விஜயின் சித்தி- தாத்தா எல்லோருமே காவிரி- விஜயை திருமணம் செய்து கொள்ள மறுக்கும் விஷயத்தைப் பற்றி சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் கவனித்து அம்மு வருத்தப்படுகிறார். மறுநாள் காலையில் விஜய் வாக்கிங் முடித்துவிட்டு வரும்போது வீட்டில் அம்மு இல்லை.எல்லா இடத்திலேயுமே தேடிப் பார்க்கிறார். ஆனால், அம்மு- காவிரியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து விடுகிறார். விஜய், அம்முவை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அம்மு, காவேரி வீட்டிற்கு வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். அந்த பக்கம் வந்த நிவின், அமுவை பார்த்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். விஜய் இடம் நடந்தது எல்லாம் நிவின் சொல்கிறார். விஜயும் அம்முவை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு பேசுகிறார். அதற்குப்பின் நிவின் காவிரியிடம் அம்மு செய்த விஷயத்தை பற்றி சொல்கிறார்






