விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் ராகினி, உன் புருஷனை இனிமேல் வெளியே எடுக்க முடியாது. விஜயை தொக்காக உள்ள வைத்து விட்டோம். வெண்ணிலாவுக்கு கிடைக்காத விஜய் உனக்கும் கிடைக்கக்கூடாது என்றெல்லாம் ரொம்ப கேவலமாக பேசி இருந்தார். உடனே கோபத்தில் கோபத்தில் காவிரி, ராகினியை அடித்து விட்டார். இதனால் பசுபதி, காவிரியிடம் சண்டைக்கு போனார். பின் சண்டையில் ராகினி, காவிரியை அடித்து விட்டார். பின் இருவருக்கும் இடையே கலவரம் வெடித்தது. அங்கிருந்த போலீஸ் இருவரையும் விலக்கி விட்டார்கள்.

அப்போது அங்கு வந்த விஜய்யின் தாத்தா, எதற்கு தேவையில்லாமல் சண்டை போடுகிறார் காவிரி. இவர்களைப் பற்றி நமக்கு தெரியும் தானே என்று காவிரியை அழைத்து சென்றார். அதற்கு பின் வழக்கறிஞர், ஏதாவது குழு கிடைத்தால் கூட விஜய்யை அழைத்து வந்துவிடலாம். இன்னும் விஜய் மீது எப்ஐ ஆர் போடவில்லை என்று சொன்னார். உடனே காவிரி, விஜயின் சித்தியை சந்திக்க வேண்டும் என்று சொன்னார். பின் காவிரி-விஜயின் தாத்தாவும் சித்தி வீட்டுக்கு போனார்கள். அங்கு தாத்தா, விஜய்யின் நிலைமை பற்றி எடுத்து பேசினார்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் தாத்தா எவ்வளவு சொல்லியுமே விஜயின் சித்தி, அமைதியாகவே நின்றார். அப்போது காவிரி, விஜய்யை கைது செய்த உடனே டிவியில் எல்லாம் வந்துவிட்டது. எல்லாம் தெரிந்து நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா? உண்மையை மட்டும் சொல்லுங்கள். தயவு செய்து விஜயை காப்பாற்றுங்கள் என்று சொன்னார். அதற்கு விஜயின் சித்தி, என் கணவர் உண்மையை சொல்லக்கூடாது என்று மிரட்டினார். என் மகனுமே என் வாழ்க்கையை கெடுத்து விடாதே என்று சொன்னார். நான் என்ன செய்வது? என்னால் எந்த உண்மையையும் சொல்ல முடியாது என்றார். இதனால் தாத்தா கோவப்பட்டார். காவிரி,உங்களுக்கு மனசாட்சி இருந்தால் தயவு செய்து விஜய்யை காப்பாற்றுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் காவிரி- விஜயை நினைத்து ப்ரஸரில் கங்காவிற்கு வயிறு வலி எடுத்து விட்டது. இதனால் அவரை உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்கள். பின் வீட்டிற்கு கங்காவை அழைத்து வந்தார்கள். அப்போது கங்காவின் மாமியார், இங்கிருந்தால் என்னுடைய பேர பிள்ளைக்கு ஏதாவது பிரச்சனையாகும் என்று பயந்தார். உடனே கங்காவின் அம்மா, நாங்களே கிளம்பி வருகிறோம். மாப்பிள்ளையும் கங்காவும் இங்கே இருக்கட்டும். நாங்கள் ஊரிலேயே ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்று முடிவு எடுத்தார். இன்னொரு பக்கம் தாத்தாவிற்கு ஃபோன் செய்த வக்கீல், ரொம்ப நேரம் ஆகிவிட்டது. விஜய் மீது எஃப் ஐ ஆர் பதிவு பண்ணாமல் இருக்க முடியாது என்று சொன்னார். போலீஸ் ஸ்டேஷன் வந்த காவேரி, வெண்ணிலாவிடம் பேசப்போனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிவின், யமுனாவும் காவிரி வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். காவிரி வீட்டிற்கு வராதது நினைத்து மொத்த பேருமே கவலையில் இருக்கிறது. அப்போது நிவின், காவிரி பார்க்க கிளம்புகிறார். உடனே யமுனா திட்டுகிறார். பின் தன்னுடைய அம்மாவிடம் யமுனா, காவிரி - விஜய்யை சேர்த்து வையுங்கள். இல்லை என்றால் காவிரியை ஊருக்கு அழைத்து செல்லுங்கள் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே காவிரியின் அத்தை, இதற்கு சீக்கிரமாக முடிவெடுங்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் வெண்ணிலாவிடம் பேசுவதற்காக அவரை தனியாக அழைத்துக் கொண்டு செல்கிறார் காவிரி.

சீரியல் ட்ராக்:
இதைப் பற்றி தாத்தா, விஜய்யிடம் சொல்கிறார். விஜய், அவளை வீட்டிற்கு அனுப்ப வேண்டியது தானே, வெண்ணிலாவை மாற்ற முடியாது. அவள் பசுபதி சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று காவிரியை நினைத்து வருத்தப்படுகிறார். கடைசியில் காவிரி, வெண்ணிலாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது காவிரி, விஜய் உன்னை அவ்வளவு காதலித்தார். அவருக்காக தான் உன்னை நான் வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆனால், நீ அவர் மீது பழி போட்டு இருக்கிறாய் என்று கேட்கிறார். வெண்ணிலா, விஜய் உன் மீது பைத்தியமாக இருக்கிறாரே, விஜய் எனக்கு எப்படியாவது வேண்டும். அதற்காக தான் பசுபதி சொன்னது போல் நான் செய்கிறேன். விஜய் என்னை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டால் நான் உண்மையை சொல்லி விடுவேன் என்று என்கிறார். இதையெல்லாம் காவிரிக்கு தெரிந்த நபர் ஃபோனில் ரெக்கார்ட் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






