விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் குமரன் கடையில் தனியாக வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நிவின்- விஜய் இருவருமே அவருக்கு சப்போர்ட்டாக வந்துவிட்டார்கள். பின் மூவரும் கலகலப்பாக பேசி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் நிவின்- விஜய் இருவரும் தூங்கி விட்டார்கள். இருந்தாலும் விடாமல் குமரன் வேலை செய்து கொண்டிருந்தார். அதோட வேலைக்கு சில ஆட்களையும் குமரன் வைத்து செய்தார். பின் தூக்கத்தில் விஜய், காவேரியின் பெயரை சொல்லி கொண்டிருந்தார். இதையெல்லாம் நிவின்- குமரன் இருவருமே கிண்டல் செய்தார்கள்.

குமரன் இரவு பகல் என்று பார்க்காமல் தன்னுடைய ஆர்டரை முடித்து கங்காவின் வளைகாப்பை சிறப்பாக நடத்த வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருந்தார். விஜய்-நிவின் இருவரும் குமரனுக்கு சப்போர்ட் செய்தார்கள். கங்கா, உண்மை தெரியாமல் குமரனை திட்டிக் கொண்டிருந்தார். வீட்டிற்கு வந்த குமரனும் எதுவும் சொல்லாமல் வேலை இருக்கிறது என்றார். அதற்குப்பின் காவிரியிடம் குமரன், கங்காவின் வளைகாப்பு சிறப்பாக நடத்தணும்.
மகாநதி:
மேக்கப் மற்ற விஷயங்கள் எல்லாம் நீ செய்ததாகவே சொல். நான் செய்தேன் என்று நினைத்தால் அவள் நன்றாக இல்லை என்று கோபப்படுவாள் என்று சொன்னார். அதற்குப்பின் காவிரி-விஜய் இருவருமே பைக்கில் ரைடு போனார்கள். காவிரிக்கு குமரன் செய்யும் வேலை பற்றி தெரியாது. விஜய், உண்மை எதுவும் சொல்ல விலை. பின் இருவரும் ரொம்ப ஜாலியாக பேசிக்கொண்டு போனார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவிரியை அழைத்துக் கொண்டு குமரன் கடைக்கு தான் போகிறார். குமரன் கஷ்டப்பட்டு வேலை செய்வதை பார்த்து காவேரி வருத்தப்படுகிறார். கங்காவின் வளைகாப்பிற்காக தான் இது எல்லாம் குமரன் செய்கிறார் என்பதை தெரிந்து கொண்டு காவேரி பாராட்டுகிறார். உடனே குமரன், இந்த உண்மையை கங்காவிடம் சொல்ல வேண்டாம் என்கிறார். மறுநாள் கங்காவின் வளைகாப்பிற்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. குமரன் வரவில்லை என்று கங்கா பயங்கர கோபத்தில் இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
காவிரியும் உண்மையை சொல்லாமல் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். இன்னொரு பக்கம் குமரன் தன்னுடைய ஆர்டரை முக்கால்வாசி முடித்து விடுகிறார். பின் அந்த ஆர்டர் கொடுத்த நபர்களிடம் முழு பணத்தையும் குமரன் கேட்கிறார். ஆனால், அவர்கள் தர முடியாது என்று சொல்வதால் குமரனுக்கும் ஆர்டர் கொடுத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. இன்னொரு பக்கம் குமரன் வராததால் வீட்டில் எல்லோருமே கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யுமே குமரனுக்கு போன் செய்து விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






