விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் காவிரி, வெண்ணிலா உண்மையைச் சொன்னால் விஜய்யை விடுவீர்கள் தானே என்று சொன்னார் பசுபதி. அதற்கு வெண்ணிலா இங்கு வரணும் என்ற தோணியில் பார்த்தார். பின் காவிரி, வெண்ணிலா வரவில்லை என்றாலும் அவர் சொன்ன வாக்குமூலம் இருக்கிறது என்று வெண்ணிலா பேசியதை ரெக்கார்ட் செய்த வீடியோவை போலீஸிடம் காண்பித்தார். அதை பார்த்தவுடன் பசுபதி, விஜய் சித்தப்பா, வெண்ணிலா மாமா எல்லோருமே ஷாக் ஆனார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் வெண்ணிலாவின் மாமா தடுமாறி இருந்தார். உடனே விஜயின் சித்தப்பா- பசுபதி இருவருமே, இது பொய். வெண்ணிலாவை மிரட்டி வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

அந்த சமயம் பார்த்து போலீஸ் ஸ்டேஷன் வந்த விஜய்யின் சித்தி, விஜய் மீது எந்த தவறும் இல்லை. இதெல்லாம் என் கணவர் செய்த வேலைதான். அவருக்கு துணை பசுபதி தான் என்று உண்மையை சொல்லி விட்டார். இதனால் போலீஸ் விஜய்யை விட்டு விட்டார்கள். விஜய் வெளியே பார்த்தவுடன் காவிரி அவரை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டார். பின் விஜய்- காவிரி இருவருமே பசுவதியிடம் சவால் விட்டார்கள். இதையெல்லாம் பார்த்து தாத்தாவிற்கு ஒரே சந்தோஷம். பின் காவிரி-விஜய் இருவருமே கைகோர்த்து கிளம்பும்போது ராகினி, வெண்ணிலா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்கள். விஜய்- காவிரி சேர்ந்து இருப்பதை பார்த்து வெண்ணிலா கோபப்பட்டார்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் வெண்ணிலா, பொய் சொல்லி என்னை ஏமாற்றுகிறாய். விஜய்யை திருமணம் செய்து வைக்கிறேன் என்று என்னை ஏமாற்றி விட்டாய் என காவிரியை மோசமாக திட்டி இருந்தார். உடனே காவேரி, நீ செய்த பித்தலாட்ட வேலையுடன் நான் ஒன்னும் செய்து விடவில்லை. விஜய்யை யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன். உன்னிடம் நேர்மை இல்லை. அதனால் நானும் உன்னை ஏமாற்றினேன் என்று சொன்னார். வெண்ணிலாவால் எதுவும் பேசமுடியவில்லை. விஜய்-காவிரி இருவருமே வெண்ணிலாவிற்கு பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து சொன்னார்கள்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் காவிரி வீட்டுக்கு வராததால் மொத்த குடும்பமே பதறிக் கொண்டிருக்கின்றது. அப்போது நிவின், காவிரி- விஜய்க்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். உடனே யமுனா, நிவினை அழைத்துக் கொண்டு உள்ளே போனார். அப்போது யமுனா மோசமாக காவிரியையும் நிவினையும் இணைத்து வைத்து பேசி இருந்தார். இதனால் கோபப்பட்டு நிவின், யமுனாவை அடித்து விட்டார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். யமுனாவிடம் விசாரித்தார்கள். இன்னொரு பக்கம் காரில் விஜய்- காவிரி இருவருமே சந்தோசமாக ரொமான்டிக்காக பேசிக்கொண்டு வந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிவின், யமுனாவை அடித்ததை நினைத்து வீட்டில் உள்ள எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது கங்கா, அவள் வாய்க்கொழுப்பு அதனால்தான் அடித்திருப்பார் என்று உண்மையை சொல்கிறார். யமுனாவும் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்புகிறார். குமரன், யமுனாவை அவருடைய வீட்டில் விட்டு நடந்ததை விசாரிக்கிறார். அப்போது யமுனா, காவிரி- நிவினை பற்றி சேர்த்து வைத்து பேசுகிறார். உடனே குமரன், அப்படியெல்லாம் யோசிக்காதே என்று அறிவுரை சொல்கிறார். அதற்கு பின் நிவினிடம் குமரன் பேசுகிறார். அப்போது நிவின், நான் செய்தது தவறு தான் என்று மன்னிப்பு கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் குமரன், காவிரிக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது காவிரி-விஜய் உடன் இருப்பது குமரனுக்கு தெரிய வருகிறது. பின் வீட்டில் குமரன், பொருட்காட்சியில் வேலை இருக்கிறது. அதனால் காலை தான் காவிரி வருவார் என்று ஏதேதோ சொல்லி சமாளித்து வருகிறார். இன்னொரு பக்கம் விஜய்- காவிரி இருவருமே ரொம்ப சந்தோஷமாக காரில் பேசிக் கொண்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் வெண்ணிலா, பசுபதியையும் ராகினியையும் திட்டிக் கொண்டிருக்கிறார். உங்களால் தான் விஜய் என்னை தப்பாக புரிந்து கொண்டு வெறுக்கிறான் என்று கோபப்பட்டு திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






