விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் வெளியே வந்ததால் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பாட்டி மட்டும் கோபத்தில் ரூமிற்கு சென்று விட்டார். அப்போது காவிரியை பார்த்து பாட்டி பயங்கரமாக திட்டினார். உன்னால் தான் என் பேரனுக்கு இந்த நிலைமை என்று சொல்வதால் காவிரியால் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி ஒவ்வொரு ரூமாக சென்று விஜய் உடன் இருந்த பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வெண்ணிலா அங்கு வந்தார். அப்போது காவிரி, வெண்ணிலாவிற்கு நன்றி சொன்னார்.

உடனே வெண்ணிலா, நீ சொன்னது போல் நான் செய்து விட்டேன். நீ எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவாயா? என்று கேட்டார். அதற்கு வெண்ணிலா, இனி விஜய்- காவேரி கிடையாது. நான் சொன்னது போல் விஜயின் வாழ்க்கை விட்டு போகிறேன். நீ பத்திரமாக விஜய்யை பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். உடனே விஜய், காவிரி என்னுடன் இங்கே இரு என்று சொன்னார். ஆனால், காவேரி கேட்காமல் விஜய்யை உதாசீனப்படுத்திவிட்டு சென்றார். விஜய்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் வெண்ணிலா, தான் செய்த தவறுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். அதற்கு விஜய் அவருக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி இருந்தார். அந்த சமயம் பார்த்து வெண்ணிலாவின் மாமா வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது அவர், விஜயின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு வெண்ணிலாவை நானே அழைத்துச் செல்கிறேன் என்றார். உடனே விஜய்யின் தாத்தா, நாளை செல்லுங்கள் என்று சொல்வதால் வெண்ணிலாவின் மாமாவும் சம்மதித்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு சென்ற காவிரியை பார்த்து அவருடைய அம்மா, எங்கே போனாய்? விஜய்யை பார்த்தாயா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

நேற்று எபிசோட்:
அதற்கு காவிரி, ஆமாம் நான் விஜயை வெளியே எடுக்க தான் போனேன். பசுபதியால் விஜய் மாட்டிக் கொண்டார். அதனால் தான் நான் விஜய்க்கு உதவி செய்தேன். உன்னிடம் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி நான் எதையும் செய்ய மாட்டேன். நீ பயப்படாதே என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். பின் காவிரி, விஜய்யை விட்டு பிரிந்து போவதை நினைத்து ரொம்ப எமோஷனலாக கதறி அழுது கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜய், காவிரியை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். காவிரிக்கு மெசேஜ், போன் எல்லாம் விஜய் பண்ணுகிறார். ஆனால், காவேரி எந்த ரிப்ளைமே செய்யவில்லை. விஜய்க்கு என்னவோ பிரச்சனை இருக்கிறது என்று புரிகிறது. இன்னொரு பக்கம் காவேரி, விஜயை மறக்கவும் முடியாமல் சேர்ந்து வாழவும் முடியாமல் ரொம்பவே வேதனை பட்டுக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவிரி போன் எடுக்காததால் விஜய் ரொம்பவே கவலையில் இருக்கிறார். அப்போது வெண்ணிலா தனியாக இருப்பதை பார்த்த விஜய் பேச போகிறார். இன்னொரு பக்கம் வெண்ணிலாவும் தூங்காமல் நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது விஜய், இன்னும் தூங்கவில்லையா? உன்னுடைய மாமா வீட்டில் தான் இருக்கிறார். தைரியமாக இரு என்று சொல்லி ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு சென்ற நிவினிடம் வழக்கம் போல யமுனா சண்டை வாங்கினார். இதனால் கோபப்பட்ட நிவின், உன்னிடம் நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒழுங்கு மரியாதையாக துணியை எடுத்து கொண்டு கிளம்பி விடு என்று திட்டிவிட்டு சென்றார்.

சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் குமரனிடம் காவிரி, நான் பசுபதியை பார்க்க வேண்டும். அதேபோல் நான் கொடைக்கானல் போகலாம் என்று இருக்கிறேன். நீங்கள் தான் அம்மாவிடம் பேசணும் என்று சொல்லுகிறார். அதற்கு குமரனும் சம்மதிக்கிறார். அதற்குப்பின் தன்னுடைய அம்மாவிடம் காவிரி, எனக்கு கொஞ்சம் மனசு சரியில்லை கொடைக்கானல் போகிறேன் என்று சொல்கிறார். ஆரம்பத்தில் காவிரியின் அம்மா தயங்கினாலும் அதற்கு பின் ஒத்துக் கொள்கிறார். பின் குமரன், காவிரி இருவருமே ஜெயிலுக்கு சென்று பசுபதியை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது பசுபதி, இன்னும் ஒரு வாரத்தில் வெளியே வந்து உன்னையும் உன் குடும்பத்தையும் அழிக்காமல் விடமாட்டேன் என்று சவால் விடுகிறார். பதிலுக்கு காவிரியுமே சவால் விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






