விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் போலீஸ் சாரதாவிடம் திருமணத்தை ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறீர்களா? என்றார். அதற்கு சாரதா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்றார். அப்போ சட்டப்படி முத்துமலர் தான் சந்தானத்தின் மனைவி என்று போலீஸ் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் சாரதாவின் குடும்பத்திற்கு தலை மேல் இடி விழுகிறது. கிருஷ்ணா தன்னுடைய அம்மா, தங்கையை உள்ளே அழைத்துக் கொண்டு போனார். விஜய் கோபத்தில் இருந்தார்.

சாரதா, இப்படியெல்லாம் திருட்டுத்தனம் பண்ணி அவளை மாரி புத்திசாலித்தனமாக கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண எனக்கு தெரியவில்லை. நாங்கள் கல்யாணத்தை முடித்துவிட்டு கோயிலுக்கு போனோம். கொடைக்கானல் வீட்டில் அவருடன் சேர்ந்து எடுத்த கல்யாண போட்டோ இருக்கு. மற்றபடி எந்த ரெஜிஸ்டரும் செய்யவில்லை என்று அழுது புலம்பினார். கோபத்தில் காவிரி- கங்கா இருவருமே தன்னுடைய அம்மாவின் முட்டாள்தனத்தை நினைத்து திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் விஜய் அவர்கள் மூவருக்குமே ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
மகாநதி:
இன்னொரு பக்கம் பாட்டி, கிருஷ்ணா-சிந்துவுடன் எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்து காவிரிக்கு கோபம் வந்தது. உடனே விஜய், உனக்கு இருக்கும் வலி வேறு அவர்களுக்கு இருக்கும் வலி வேறு புரிந்துக்கொள் என்று அறிவுரை சொன்னார். அதற்கு பின் விஜய், கங்கா, காவிரி மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் விஜய்யின் பாட்டி, தாத்தா, சித்தி மூவருமே காவேரி குடும்பம் செய்யும் வேலையை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்கள். அப்போது வந்த விஜய், காவிரியின் நிலைமைக்காக அமைதியாக இருங்கள். சீக்கிரமாகவே இந்த பிரச்சினை முடித்து விடுகிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த முத்துமலர், நான் உதவி செய்யட்டுமா அக்கா? அவருக்கு நல்லெண்ணெய் அதிகமாக ஊத்தி சமைத்தால் தான் பிடிக்கும் என்றெல்லாம் சந்தானத்தை பற்றி எல்லாம் தெரிந்தது போல பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கேட்டு சாரதாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. கோபத்தில் சாரதா சண்டை போடுகிறார். உடனே காவேரி, தன்னுடைய அம்மாவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் ஒரு செட்ரூமில் முத்துமலர், சிந்து இருப்பதை பார்த்த விஜய், இவர்களை எதற்கு இங்க தங்க வைத்தீர்கள்? கெஸ்ட் ரூமில் தங்க வையுங்கள். எல்லா ஏற்பாடும் செய்து கொடுங்கள். யார் என்ன சொன்னாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அனுப்பி வைக்கிறார். அதற்குப்பின் காவிரி, கால் வலிக்கிறது என்று சொல்வதால் விஜய் கால் அமுக்கி விடுகிறார். பின் இருவருமே தங்கள் குழந்தையுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






